டேட்டிங் ஆப் காதல்.. இந்தியரை கல்யாணம் செய்த பாக். இளம்பெண்! ஜோடியை பிரித்து பாக். அனுப்பிய போலீஸ்
பெங்களூரு: டேட்டிங் ஆப் மூலம் இந்தியரை காதலித்த பெண், அவரை நேபாளத்தில் சட்டவிரோதமாக திருமணம் செய்து இந்தியாவிற்கு வந்தார். கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்த பெண்ணை பிரித்து சொந்த நாட்டுக்கே போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
பெங்களூருவில் சட்டவிரோதமாக நகரில் தங்கியிருந்த 19 வயது இக்ரா ஜீவானியை பெங்களூரு பெல்லந்தூர் போலீஸார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரை பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 25 வயது காவலாளி முலாயம் சிங். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டேட்டிங் செயலி மூலம் இக்ரா ஜீவானியை (வயது 19) சந்தித்தார். இருவரும் ஆன்லைனில் தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தேர்ந்தெடுந்த வழிதான் அவர்களை போலீசார் பிரித்து திருப்பி அனுப்பும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

நேபாளம் சென்றனர்
தனது காதலியை திருமணம் செய்ய விரும்பிய முலாயம் சிங், அவரை நேரடியாக இந்தியா அழைத்து வர முயற்சித்திருக்கிறார். ஆனால் ஜீவானிக்கு விசா கிடைக்கவில்லை. இதனால் இந்தியாவிற்கு நேரடியாக அழைத்து வராமல், நேபாளத்திற்கு வரவழைத்துள்ளார். நேபாளத்தில் காதலியை திருமணம் செய்துள்ளார். பின்னர் இந்தியாவிற்கு நேபாளம் வழியாக காதலியை சட்டவிரோதமாக அழைத்து வந்துள்ளார்.

பாஸ்போர்ட் விண்ணப்பம்
பீகாரில் உள்ள பிர்கஞ்ச் சென்று பாட்னா சென்றடைந்த தம்பதியர், குற்றம் பெங்களூரு வந்து ஜுன்னசந்திராவில் உள்ள ஐயப்பன் கோவில் அருகே வாடகை வீட்டில் தங்கியிருந்துள்ளார்கள். முலாயம் கடந்த செப்டம்பர் 2022 முதல் காவலாளியாக பணியாற்றத் தொடங்கினார். முலாயம் சிங் தனது பெயரை ராவா யாதவ் என்று மாற்றி இந்திய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்துள்ளார். பின்னர் இக்ராவுக்கு ஆதார் அட்டையையும் வாங்கி கொடுத்துள்ளார்.

நேரில் சென்ற உளவுத்துறை
இதனிடையே பாகிஸ்தானில் உள்ள தனது குடும்ப உறுப்பினர்களை தொடர்பு கொள்ள இக்ரா ஜீவானி முயன்றுள்ளார். என்னது இது அடிக்கடி பாகிஸ்தானுக்கு பெங்களூருவில் இருந்து அழைப்பு போகிறதே என்று மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தினர். அதன்பின்னர் மாநில உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது தான் இந்த மோசடி வெளிச்சத்துக்கு வந்தது.

பின்னணி என்ன
கர்நாடகா போலீசார் வீட்டிற்குள் நுழைந்து முலாயம் மற்றும் இக்ராவை கைது செய்து அவர்கள் யார் என்ற விவரங்களை சரிபார்த்தனர். இக்ராவை பின்னர் FRRO அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவர் ஒரு மாநில பெண்கள் இல்லத்திற்கு மாற்றப்பட்டார். இக்ரா உளவு பார்க்கும் கும்பலின் ஒரு பகுதியாக இருக்கிறாரா என்பதைச் சரிபார்க்க அவரது பின்னணியை போலீஸார் சரிபார்த்து வந்தனர்.

பாக் பெண் ஒப்படைப்பு
இதனிடையே இக்ரா ஜீவானி உளவு கும்பலைச் சேர்ந்தவர் இல்லை என்பதும், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த காதலனை டேட்டிங் ஆப் மூலம் காதலித்து நேபாளத்தில் திருமணம் செய்து கொண்டு சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தவர் என்பது விசாரணையின் இறுதியில் உறுதியானது. இதையடுத்து இக்ராவின் பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள்,பஞ்சாப் அழைத்துச் சென்று வாகா எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications