பாஜக தோற்கும் எனக்கூறிய ‛AXIS MY INDIA’ சர்வேயை டெலிட் செய்தாரா மோடி? பகீர் கிளப்பிய சித்தராமையா
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் பாஜக தோற்கும் எனக்கூறிய ‛ஆக்சிஸ் மை இந்தியா' கருத்து கணிப்பு முடிவை பிரதமர் மோடி டெலிட் செய்ததாக கர்நாடகா முதல்வர் சித்தராமையாக பரபரப்பான கருத்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் 14 தொகுதிகளுக்கு கடந்த 26ம் தேதி லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது.

மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு மே 7 ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டுடு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அதேபோல் கர்நாடகா லோக்சபா தேர்தலிலும் அதிக இடங்களை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது.
இந்நிலையில் தான் பல்லாரி விஜயநகர் லோக்சபா தொகுதியில் முதல்வர் சித்தராமையா பிரசாரம் செய்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது பாஜக தோற்கும் என வெளியிடப்படும் சர்வேயை பிரதமர் மோடி டெலிட் செய்வதாக பரபரப்பான குற்றச்சாட்டை கூறினார். இதுபற்றி சித்தராமையா கூறியதாவது: நரேந்திர மோடிக்கு இந்த தேர்தலில் அதிகாரத்தை இழந்து விடுவோம் என்ற கவலையில் உள்ளார். ஏனென்றால் இந்த தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை.
லோக்சபா தேர்தல் தொடர்பாக அவர்கள் (பாஜக) எடுத்த சர்வேயின்படி 200 முதல் 220 தொகுதிகள் வெல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நான் இன்னொரு விஷயத்தை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறேன். ‛ஆக்சிஸ் மை இந்தியா' என்ற அமைப்பு சார்பில் தேர்தல் தொடர்பாக சர்வே மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது.
இந்த சர்வேயில் பாஜக 200 முதல் 210 இடங்களில் மட்டுமே வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. உடனே பிரதமர் மோடியின் அரசு தலையிட்டு டெலிட் செய்தனர். 210 சீட் மட்டுமே வெற்றி பெறுவார்கள் என்று தெரிந்தால் மக்கள் பாஜகவுக்கு ஓட்டு போடமாட்டார்கள் என்ற பயத்தில் டெலிட் செய்தனர்'' என பரபரப்பாக குற்றம்சாட்டி உள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications