லட்சங்களில் ஜீவனாம்சம் கேட்டு கொடுமை.. கணவர் சுபாஷ் தற்கொலை! மனைவியை குடும்பத்தோடு கைது செய்த போலீஸ்
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர் அதுல் சுபாஷின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. அவரின் மரணம் காரணமாக.. சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார்.
தற்கொலைக்கு தூண்டியதாக சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை போலீசார் கைது செய்தனர். அதோடு அவரின் அம்மா, தம்பியையும் கைது செய்தனர்.

என்ன நடந்தது?: அதுல் சுபாஷுக்கு கடந்த 2019 இல் திருமணம் நடந்தது. மனைவி, மாமியார், ஆண்களுக்கு எதிரான பாரபட்சமான சட்டங்கள் மற்றும் சிஸ்டம் காரணமாக திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் தற்கொலை செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
மனைவி 3 கோடி ஜீவனாம்சம் கேட்டார். அதோடு 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு தொகை கேட்டார். மனைவி தன் குழந்தையின் முகத்தைக் கூட பார்க்க விடவில்லை. ஜான்பூர் குடும்பநல நீதிமன்ற நீதிபதி ரீட்டா கௌசிக், வழக்கைத் தீர்ப்பதற்கு 4- 5 லட்சம் லஞ்சம் கோரினார்.
மனைவியின் குடும்பத்திற்கு உதவுவதற்காக தனது மனைவிக்கு பல லட்சங்களைக் கொடுத்துள்ளார், ஆனால் கடைசியில் வரதட்சணைக் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். சுபாஷின் மனைவியின் தந்தை திருமணமான உடனேயே நோயால் இறந்தார், ஆனால் தனது கணவர் "வரதட்சணை" கேட்டதால்தான் என் அப்பா அதிர்ச்சியில் இறந்ததாகக் கூறி அந்த பெண் அவரது குடும்பத்தினர் மீது கொலைப் பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளார்.
நிகிதா பின்னணி: நிகிதா சிங்கானியா பல லட்சங்களில் வருமானம் ஈட்டுகிறார். அதே சமயம் அவர் தனது கணவர் அதுல் சுபாஷிடம் விவகாரத்தின் போது 3 கோடி ரூபாய் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். மேலும் 4 லட்சம் ரூபாய் மாதம் பராமரிப்பு கேட்டு கோர்ட் மூலமாக 2 லட்சம் ரூபாய் பராமரிப்பு பெற ஒப்புக்கொண்டுள்ளார்.
இதெல்லாம் போக கணவர் மீதும் அவரின் குடும்பத்தினர் மீதும் பொய்யான வழக்குகளை பதிவு செய்துள்ளார். கணவரை கடந்த சில வருடங்களாக கடுமையாக கொடுமை செய்துள்ளார். இதனால் கணவர் தற்போது தற்கொலை செய்து கொண்ட நிலையில் சுபாஷின் மனைவி நிகிதா சிங்கானியாவை அசெஞ்சர் ஐடி நிறுவனத்தில் இருந்து தூக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அவரை போன்றவர்களுக்கு வேலை கொடுக்க கூடாது. அவர் பல லட்சங்களில் வருமானம் ஈட்டும் நிலையில் .. கணவரிடம் அவ்வளவு பணம் கேட்டு.. கடைசியில் அவரின் மரணத்திற்கே கூட காரணமாக மாறிவிட்ட நிலையில்.. நிகிதாவை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இணையத்தில் அசெஞ்சர் தற்போது டிரெண்டாகி வருகிறது.
தற்கொலைக்கு காரணம்: மனைவியின் தொல்லை, விவாகரத்து வழக்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பு, மனக்கஷ்டங்களால் ஐடி பொறியாளர் அதுல் சுபாஷ் தற்கொலை செய்துள்ளார். அவரின் தற்கொலை நாட்டையே உலுக்கி உள்ளது. சட்டம் எந்த வகையிலும் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை என்று கூறி தற்கொலை செய்துள்ளார். அதுல் சுபாஷ் தற்கொலை செய்யும் முன் எக்ஸ் பக்கத்தில் எலான் மஸ்க், டிரம்ப் போன்றவர்களை டேக் செய்து இதை சர்வதேச அளவிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தியாவில் சட்டசங்கள் ஆண்களுக்கு ஆதரவாக இல்லை முழுக்க முழுக்க பெண்களுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் உண்மையில் நீதி கிடைக்க வேண்டிய ஆண்களுக்கும் நீதி கிடைப்பது இல்லை என்று தற்கொலை வீடியோவில் கூறி உள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications