லத்தியை எடுத்து.. புல்லாங்குழலாக்கி.. ஊஊஊஊ என்று ஊதி அசத்திய போலீஸ்காரர்!
பெங்களூர்: லத்தியை புல்லாங்குழலாக்கி அதிலிருந்து பாடல்களை இசைக்கும் கர்நாடக மாநிலத்தின் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
இசைக்கு எல்லை இல்லை என்று கூறுவார்கள். அதுபோல் எங்கிருந்தும் இசையை எடுக்கலாம் என்றும் கூறுவார்கள். திறமையும் கடவுள் அனுகிரகமும் இருந்தால் இசையை எதிலிருந்தும் உருவாக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக கர்நாடக போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் திகழ்கிறார்.
கர்நாடக மாநிலத்தின் ஹூப்ளி மாவட்டத்தில் தலைமை காவலராக உள்ளவர் சந்திரகாந்த் ஹட்கி. இவர் நாட்டுப்புற பாடல்களை இசைப்பதில் வல்லவர். இவர் ஏற்கெனவே இருக்கும் இசை வாத்தியங்களை காட்டிலும் புதிய புதிய இசை வாத்தியங்களை உருவாக்குவதில் வல்லவர்.

வீடியோ
அந்த வகையில் தனது அசாத்திய திறமையால் தனக்கு வழங்கப்பட்ட லத்தியையும் புல்லாங்குழலாக்கியுள்ளார் ஹட்கி. இவர் லத்தியால் வாசித்த நாட்டுப்புற பாடல் இசைக்கும் வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
|
திறமைகள்
52 வயதான ஹட்கியின் திறமையை கண்டு பெங்களூர் கூடுதல் போலீஸ் பிரிவு அதிகாரி பாஸ்கர் ராவ் இவரை நேரில் சந்தித்து பரிசளித்துள்ளார். அத்துடன் இவரது திறமைகளை பாராட்டியும் உள்ளார்.

புகழ்
இதுகுறித்து ஹட்கி கூறுகையில் போர் அடிக்கும் போது தனிமையில் இருக்கும் போது புல்லாங்குழலை நான் வாசிப்பேன். இவ்வாறு நான் வாசித்த வீடியோவை பார்த்துவிட்டு கடந்த திங்கள்கிழமை என்னை பார்க்க வேண்டும் என ராவ் அழைப்பு விடுத்தார். பின்னர் எனது திறமையினை பாராட்டி சன்மானம் அளித்தார் என்றார் ஹட்கி. இவரது புகழ் தற்போது கர்நாடக மாநிலம் முழுவதும் பரவி வருகிறது.
|
பாராட்டு
இதனால் அவரை சமூகவலைதளங்களிலும் நேரில் பார்ப்போரும் பாராட்டிய வண்ணம் உள்ளனர். உடன் பணிபுரியும் காவலர்கள், நண்பர்கள், உறவினர்கள் இவருக்கு போன் செய்து பாராட்டியும் இன்னும் சிலர் எஸ்எம்எஸ் அனுப்பியும் வருகின்றனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications