16வயது சிறுமி முதல் புதுசு புதுசா பலான புகார்கள்.. இப்போ பிரஜ்வல் மீது அல்ல, அவர் அப்பா ரேவண்ணா மீது
பெங்களூர்: 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக கொடுக்கப்பட்டுள்ள புகாரின் அடிப்படையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் கர்நாடகா முன்னாள் அமைச்சருமான ரேவண்ணாவை அம்மாநில எஸ்.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் இன்று கைது செய்யக் கூடும் என கூறப்படுகிறது.
தேவகவுடா மகன் ரேவண்ணா, அவரது மகன் பிரஜ்வல் ஆகியோரது 3,000 ஆபாச வீடியோக்கள்தான் கர்நாடகாவை தகிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் ரேவண்ணா, மகன் பிரஜ்வல் மீது போலீசார் அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தொடர்ந்து புகார் தருவதால் ஒவ்வொரு நாளும் புதிய புதிய திருப்பங்கள், பரபரப்புகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

இந்த நிலையில் ரேவண்ணா வீடுகளில் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் விடிய விடிய தீவிர சோதனைகளை நடத்தினர். இந்த சோதனைகளின் போது ஏராளமான ஆதாரங்களை எஸ்.ஐ.டி. போலீசார் அள்ளிச் சென்றுள்ளனர்.
இதனிடையே மக்கள் பிரதிநிதித்துவ நீதிமன்றத்தில் தமக்கு முன்ஜாமீன் கோரி ரேவண்ணா மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது பதிலளிக்க எஸ்.ஐ.டிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்தது. அதேநேரத்தில் ரேவண்ணாவை விசாரணைக்கு ஆஜராகவும் எஸ்.ஐ.டி.அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். இது தொடர்பான சம்மன் ரேவண்ணா வீட்டிலும் ஒட்டப்பட்டிருந்தது.
தற்போதைய நிலையில் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் முன்னிலையில் ரேவண்ணா விசாரணைக்கு ஆஜராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி ரேவண்ணா ஆஜராக மறுத்தால் அவரை போலீசார் எந்த நேரத்திலும் கைது செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், ரேவண்ணா மீது ஒவ்வொரு திசையிலும் புதிய புதிய புகார்கள் குவிந்து கொண்டே இருக்கின்றன. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் ஒருவர், போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கக் கூடாது என்பதற்காக ரேவண்ணாவால் கடத்தி சித்ரவதை செய்யப்பட்டதாகவும் தற்போது புதிய புகார் பதிவாகி இருக்கிறது. ஏற்கனவே ரேவண்ணா மகன் பிரஜ்வல் வெளிநாடு தப்பி ஓடிவிட்டார். இந்த நிலையில் எஸ்.ஐ.டி. போலீசாரிடம் இருந்து ரேவண்ணாவால் தப்பிக்கவே முடியாது எனவும் கூறப்படுகிறது.
-
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை!












Click it and Unblock the Notifications