Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எதிர்க்கட்சி வென்றால் ராகுல் தான் பிரதமர்! ஆலோசனைக்கு நடுவே காங்கிரஸ் தலைவர் பரபர பேச்சு.. சலசலப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பெங்களூரில் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் பிரதமர் வேட்பாளர் முடிவு செய்யப்படாத நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். பிரதமராக ராகுல் காந்தி தான் பொறுப்பேற்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. தங்களின் வெறுப்புகளை மறந்து பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஒவ்வொரு கட்சியினரும் ஓரணியில் திரண்டுள்ளனர். கடந்த மாதம் 23ம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் நடந்தது. இதில் 18 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

 Rahul Gandhi Will Become PM, Says Congress Leader Eshwar Khandre Ahead of Opposition Meeting in Bangalore

இதன் தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்களின் 2வது ஆலோசனை கூட்டம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைமை வகித்துள்ளது. சோனியா காந்தி தலைமையில் நேற்று முதல் நாள் ஆலோசனை நடந்து முடிந்தது.

இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தமிழக முதல்வர் ஸ்டாலின், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட 24 கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இன்று 2வது நாள் கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது.

இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது. குறிப்பாக பாஜகவை வீழ்த்த ஓரணியில் திரண்ட இந்த கூட்டணிக்கு பெயர் வைக்கப்பட உள்ளது. மேலும் குறைந்தபட்ச செயல் திட்டம், ஒவ்வொரு மாநிலங்களிலும் தொகுதிகளை பங்கீட்டு கொள்வது தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. இதனால் இன்றைய கூட்டம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இருப்பினும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் ? என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எதிர்க்கட்சிகளின் ஆலோசனையில் பிரதமர் வேட்பாளர் யார்? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. பிரதமர் பதவி மீது பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கண்வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பிரதமர் பதவிக்கான ரேஸில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் விரும்புகிறது. அதேபோல் திமுகவும் இந்த நிலைப்பாட்டில் தான் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், நிதிஷ் குமார் உள்ளிட்டவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிய தயாராக இல்லை. இதனால் இதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்நிலையில் தான் நேற்றைய ஆலோசனைக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் கர்நாடகா மாநில செயல் தலைவரும், அம்மாநில அமைச்சருமான ஈஸ்வர் காண்ட்ரே பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அவர் 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும். ராகுல் காந்தி தான் பிரதமராவார் என கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி அவர் கூறியதாவது:

கர்நாடகாவில் பாஜக தோற்கடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளது. இது நாடாளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி வெற்றி பெறும்.அதன்பிறகு ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்பார்'' என தெரிவித்துள்ளார். இது தற்போது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராகுல் காந்தி தான் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்ற வகையில் பேசியுள்ள ஈஸ்வர் காண்ட்ரே கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ஆவார். இவர் கர்நாடகாவில் பாஜகவின் ஓட்டு வங்கியாக இருக்கும் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+