நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகள் முற்றுகை- பெங்களூர், ஹைதராபாத், சண்டிகரில் காங். உக்கிர போராட்டம்!
பெங்களூர்: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதையும், டெல்லி போலீசாரால் காங். தலைவர்கள் தாக்கப்பட்டதையும் கண்டித்து நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் இன்று நடத்தினர். இதனால் பெங்களூர், ஹைதராபாத், சண்டிகரில் பெரும் பரபரப்பு நிலவியது.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் 3 நாட்களாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை ஒவ்வொரு நாளும் பல மணிநேரம் நடைபெற்றது.

அதேநேரத்தில் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் காங்கிரஸ் தலைவர்கள் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது காங்கிரஸ் தலைவர்கள், எம்.பிக்கள் போலீசாரால் தாக்குதலுக்குள்ளாகினர். இது தொடர்பாக டெல்லியில் இன்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் காங்கிரஸ் எம்.பிக்கள் புகார் தெரிவித்தனர்.
மேலும் நாடு முழுவதும் ஆளுநர் மாளிகைகளை முற்றுகையிடும் போராட்டத்தை காங்கிரஸ் இன்று நடத்தி வருகிறது. இதனால் கர்நாடகாவின் பெங்களூரு, தெலுங்கானாவின் ஹைதராபாத் மற்றும் சண்டிகர் நகரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூர் நகரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதில் ஆம்புலன்சுகளும் சிக்கிக் கொண்டன. பெங்களூரில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற காங் தலைவர்கள் சித்தராமையா, சிவக்குமார் உள்ளிடோர் கைது செய்யப்பட்டனர்.
தெலுங்கானாவில் மத்திய அரசின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது. இதனால் தலைநகர் ஹைதராபாத்தில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சண்டிகரிலும் சாலைகளை மறித்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். கோவா தலைநகர் பனாஜியிலும் போராட்டம் நடத்திய காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். உ.பி. மாநிலம் லக்னோவில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட சென்ற காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு அனுமதி தரப்படவில்லை. தமிழகத்தில் சென்னையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியினர் இன்று போராட்டம் நடத்தினர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications