அந்த 8 நிமிட திக்திக்..நூலிழையில் தப்பிய ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்.. ரயில்வே ஊழியரின் தரமான சம்பவம்
பெங்களூர்: திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ராஜதானி எக்ஸ்பிரஸ் சென்ற தண்டவாளத்தில் வெல்டிங் விட்டு இருந்ததை கண்டுபிடித்து சமயோஜித புத்தியால் ரயில்வே தண்டவாள பராமரிப்பாளர் ஒருவர் முன்கூட்டியே ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு பல நூறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதிகாலையில் 8 நிமிடத்தில் நடந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விபரம் வருமாறு:
தற்போது அடிக்கடி ரயில் விபத்துகள் நடந்து வருகின்றன. ரயில்கள் தடம்புரளும் சம்பவங்களால் மத்திய ரயில்வே துறையை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றன. இதற்கிடையே தான் ரயில்வே விபத்தை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசும் மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் தான் தற்போது ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்குவதை தண்டவாள பராமரிப்பு பணியாளர் ஒருவர் தடுத்து நிறுத்தி உள்ளார். சுமார் 5 நிமிடத்தில் அரை கிலோமீட்டர் தொலைவு ஓடி அவர் இந்த பெரிய விபத்தை முன்கூட்டியே தடுத்துள்ளார். இந்த சம்பவம் பற்றிய பரபரப்பான தகவல்கள் வருமாறு:
திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்(வண்டி எண்: 12431) இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இயங்கும். அதாவது செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே ரயில் என்பது இயங்கி வருகிறது. இந்த ரயில் என்பது திருவனந்தபுரத்தில் இருந்து கர்நாடகா வழியாக டெல்லிக்கு செல்கிறது. திருவனந்தபுரத்தில் இருந்து இரவு 10.05 மணிக்கு புறப்படும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் அதிகாலை 5 மணிக்கு கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் ஹொன்னாவர் ரயில் நிலையத்தை கடக்கும்.
அதிகாலை என்பதால் ரயிலில் பயணிக்கும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பார்கள். இந்நிலையில் தான் வழக்கம்போல் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் ஹொன்னாவர் நோக்கி வந்து கொண்டிருந்தது. குமட்டாவை கடந்து இந்த ரயில் அதிகாலை 4.49 மணிக்கு ஹென்னாவர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேளையில் தான் ரயில் நிலையத்தின் குமட்டா ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தண்டவாள பராமரிப்பாளரான மகாதேவா நாயக்கிடம் இருந்து போன்கால் வந்தது.
அதில் பேசிய மகாதேவா, ‛‛குமட்டா - ஹொன்னாவர் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதாவது தண்டவாளத்தில் வைக்கப்பட்டு இருந்த வெல்டிங் என்பது விட்டுள்ளது. உடனடியாக ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்த வேண்டும்'' என்று கூறினார். அதனை கேட்ட ஸ்டேஷன் மாஸ்டர், ‛‛ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் குமட்டாவை கடந்துவிட்டது. ஹொன்னாவர் நோக்கி தான் வருகிறது. இன்னும் 8 நிமிடங்களில் அங்கு வந்து விடும். ஏதாவது செய்து ரயிலை முன்கூட்டியே நிறுத்தி விடுங்கள்'' என்றார்.
இதையடுத்து தண்டவாள பராமரிப்பு பணியாளர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் வரும் பாதையில் வேகமாக ஓடினார். கையில் லைட் அடித்தபடி அவர் ஓடினார். சுமார் 5 நிமிடத்தில் அரை கிலோமீட்டர் தூரம் வரை தண்டவாள பராமரிப்பு பணியாளர் மகாதேவா நாயக் ஓடினார். அவர் ரயிலை நிறுத்தும்படி சிக்னல் செய்தார். இதற்கிடையே குமட்டா ரயி ஸ்டேஷன் மாஸ்டரும் ரயிலின் லோகோ பைலட்டை தொடர்பு கொண்டு ரயிலை நிறுத்தும்படி கூறினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து தண்டவாளத்தில் வெல்டிங் விட்டு இருந்த இடத்தை ரயில்வே ஊழியர்கள் சரிசெய்தனர். அதன்பிறகு தாமதமாக ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லி நோக்கி புறப்பட்டு சென்றது. ரயில்வே தண்டவாள பராமரிப்பு பணியாளர் மகாதேவாவின் செயலால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, பல நூறு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். இதனால் அனைவரும் அவரை பாராட்டினர். ரயில்வே நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்று மற்றும் ரூ.15 ஆயிரம் அவருக்கு வழங்கப்பட்டது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications