பெங்களூரின் பல இடங்களில் செம மழை.. தருமபுரி, ஈரோடு, திருவண்ணாமலை, திருவள்ளூரிலும் காற்றுடன் மழை
பெங்களூர்: வெப்ப சலனம் காரணமாக பெங்களூர் மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது. கத்திரி வெயில் வெப்பத்தை இது குறைத்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின், செவ்வாய்ப்பேட்டை, திருவூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, சேவூர், குண்ணத்தூர், களம்பூர், மலையாம்பட்டு, ராட்டினமங்கலத்தில் கனமழை பெய்தது.

இதேபோல, தருமபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில், ஆலங்கட்டி மழை பெய்தது. ஈரோடு மாவட்டத்தில், சத்யமங்கலம், திம்பம் பகுதிகளில் மழை பெய்தது.
இதேபோல கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரிலும், மாலை முதல் ஆங்காங்கு மழை பெய்தது. யஷ்வந்தபூர், சஞ்சய்நகர், ஹெப்பால் உள்ளிட்ட வடக்கு பெங்களூரில் காற்றுடன் நல்ல மழை பெய்தது. இருப்பினும், தெற்கு மற்றும் கிழக்கு பெங்களூரில் மாலை 5 மணிவரை மழை பெய்யவில்லை. மேக மூட்டம் காணப்பட்டது. எனவே இரவு நேரத்தில் மழை பெய்யலாம் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சென்னையை பொறுத்தளவில், வானம் மேக மூட்டத்துடன் இருந்தது. மிகவும் புழுக்கமான வானிலை நிலவுவதாக மக்கள் தெரிவித்தனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications