பெங்களூருடன் ராமநகரா இணைப்பு- குமாரசாமி கட்சியை ஒரேடியாக ஒழித்து கட்டும் டிகே சிவகுமாரின் ஆயுதமா?
பெங்களூர்: கர்நாடகா அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டிருக்கிறது துணை முதல்வர் டிகே சிவகுமாரின் 'பெங்களூர்' ரூரல் மாவட்டத்துடன் ராமநகரா மாவட்டம் மீண்டும் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு. டிகே சிவகுமாரின் இந்த அறிவிப்பால் ரொம்பவே ஆடிப் போயிருப்பது தேவகவுடா- குமாரசாமி குடும்பம்தான் என கூறப்படுகிறது.
பெங்களூரு மாவட்டம் தொட்டபல்லாபூர், நெலமங்களா, யெலகங்கா, தேவனஹள்ளி, ஆனேகல், பெங்களூர் தெற்கு, பெங்களூர் கிழக்கு, ஹோஸ்கோட், ராமநகரா, மாகடி, கனகபுரா மற்றும் சன்னபட்னா தாலுகாக்களை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னர் தொட்டபல்லாபூர், நெலமங்களா, தேவனஹள்ளி, ஹோஸ்கோட், சன்னபட்னா, ராமநகரா, மாகடி மற்றும் கனகபுரா தாலுகாக்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு பெங்களூரு ரூரல் மாவட்டம் உருவானது. கடந்த 2007-ம் ஆண்டு முதல்வராக இருந்த குமாரசாமி, சன்னபட்னா (சென்னபட்னா), ராமநகரா, மாகடி மற்றும் கனகபுரா தாலுகாக்களை ஒருங்கிணைத்து புதியதாக ராமநகரா மாவட்டத்தை உருவாக்கினார். பின்னர் ஹாரோஹள்ளி தாலுகாவும் ராமநகராவில் இணைக்கப்பட்டது.

தற்போது ராமநகரா மாவட்டம் மீண்டும் பெங்களூர் ரூரல் மாவட்டத்துடன் மீண்டும் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; இனி ராமநகரா மாவட்டத்தின் 4 தாலுகாவை சேர்ந்தவர்களுமே பெங்களூர்வாசிகள்தான் என துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார். இதுதான் இப்போது பிரச்சனையின் மையமாக கர்நாடகா அரசியலில் உருவெடுத்துள்ளது.
ராமநகராவும் தேவகவுடா குடும்பமும்: ராமநகரா மாவட்டத்தில் பெரும்பான்மை ஜாதியினர் ஒக்கலிகா கவுடாக்கள்தான். முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமி, குமாரசாமி மனைவி அனிதா என பலரையும் தேர்தல்களில் வெற்றி பெற வைத்தது இந்த ராமநகரா மாவட்டம்தான். ராமநகரா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அனிதா குமாரசாமி. அண்மையில் முடிவடைந்த சட்டசபை தேர்தலில் குமாரசாமி மகன் நிகில் குமாரசாமி இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார். காங்கிரஸ் கட்சியின் இக்பால் ஹூசேன் 10,715 வாக்குகளில் அபார வெற்றி பெற்றார்.
டிகே சிவகுமாரின் கோட்டை கனகபுரா: ராமநகரா மாவட்டத்தில் இடம்பெற்றிருந்தாலும் கனகபுரா சட்டசபை தொகுதியானது பெங்களூர் ரூரல் லோக்சபா தொகுதிக்குள் இடம் பெற்றுள்ளது. கனகபுரா தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் துணை முதல்வர் டிகே சிவகுமார். அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கனகபுரா தொகுதியில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இமாலய சாதனை படைத்தவர் டிகே சிவகுமார். 2008-ம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இதே கனகபுரா தொகுதியில் வெல்லும் டிகே சிவகுமாரின் கோட்டை கனகபுரா என்பது மிகையும் அல்ல என்பதை அவர் இம்முறை பெற்ற வாக்குகளே சொல்லும். மொத்தம் பதிவான வாக்குகளில் 75.03% வாக்குகளை டிகே சிவகுமார்தான் பெற்றார். மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு வெறும் 10.82% வாக்குகள்தான் கிடைத்தது. பாஜகவின் மூத்த தலைவரான அசோகாவும் கூட 10.36% வாக்குகள் பெற்றார்.
அலறுது கவுடா குடும்பம்: இந்த பின்னணியில்தான் ராமநகரா மாவட்டத்தை பெங்களூர் ரூரல் மாவட்டத்தில் மீண்டும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற டிகே சிவகுமாரின் அறிவிப்பு. இந்த அறிவிப்பை குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் பாஜகவும் கடுமையாக எதிர்க்கின்றன. காங்கிரஸிலும் சிலா மூத்த தலைவர்கள் இதனை விரும்பவில்லை என கூறப்படுகிறது. குமாரசாமியைப் பொறுத்தவரையில் தங்களது குடும்பத்தின் வாக்கு வங்கி/ செல்வாக்கின் அடையாளமாக ராமநகரா மாவட்டத்தை கருதுகிறது. தங்களது கோட்டையின் தலைமையிடமாக கருதப்படும் ராமநகரா என்கிற ஒரு மாவட்டத்தையே இல்லாமல் செய்வது என்பது மதச்சார்பற்ற ஜனதா தளம் என்கிற கட்சியையே அழித்தொழிக்கும் அரசியல் நடவடிக்கை என்பதால் ரொம்பவே கொந்தளித்து கொண்டிருக்கிறார் குமாரசாமி. ஆனால் அசராத டிகே சிவகுமார், தேவகவுடாவிடம் இருந்து அறிவை பெற வேண்டிய நிலையில் அறிவு இல்லாதவராக குமாரசாமி இருக்கிறார் என சாடியிருக்கிறார்.
டிகே சிவகுமாரின் ரியல் எஸ்டேட் தொழில்: டிகே சிவகுமாரின் ராமநகரா இணைப்பு அறிவிப்புக்கு பின்னணியில் இன்னொரு குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. டிகே சிவகுமாரும் அவரது சகோதரர்களும் கனகபுரா தொகுதியில் மலைபோல குவித்து வைத்திருக்கும் நிலம்தான் அது. தங்களது ரியல் எஸ்டேட் தொழிலுகாக ராமநகராவை மீண்டும் பெங்களூர் ரூரல் மாவட்டத்துடன் இணைக்க முயற்சிக்கிறார் டிகே சிவகுமார் என்கின்ற குற்றச்சாட்டை பாஜகவும் குமாரசாமியும் முன்வைக்கின்றனர். அதாவது வாங்கு குவித்த பெருநிலத்தை ஒழுங்குபடுத்தி முறைபடுத்தி ஆதாயம் தேடவே இந்த நடவடிக்கையை டிகே சிவகுமார் மேற்கொள்கிறார் என்பதும் அவர்கள் குற்றச்சாட்டு. இவற்றை திட்டவட்டமாக டிகே சிவகுமார் மறுத்து வருகிறார். மேலும் பெங்களூர் நகரின் அபரிதமான வளர்ச்சியின் தொடர்ச்சிதான் இந்த நடவடிக்கை எனவும் நியாயப்படுத்துகிறார் டிகே சிவகுமார்.
-
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார்












Click it and Unblock the Notifications