144 தடையுத்தரவு போட்டும் போராட்டம்.. பதற்றத்தில் பெங்களூர்.. ராமச்சந்திர குஹாவை இழுத்து சென்ற போலீஸ்
பெங்களூர்: பெங்களூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடிய வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா போலீசாரால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடு முழுக்க குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் பெங்களூரிலும் அதன் தீவிரம் எதிரொலித்து வருகிறது.

இந்த நிலையில்தான் பெங்களூர் போலீஸ் கமிஷனர் பாஸ்கர ராவ் நேற்று இரவு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இதன்படி, பெங்களூர் நகரம் முழுக்கவே இன்று காலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி 4 பேருக்கு மேல் ஒன்றாக கூட முடியாது, போராட்டங்களை நடத்த முடியாது, குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஆளும் பாஜக அரசு இதுபோல போலீஸ் நடவடிக்கையை எடுத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மற்றொரு பக்கம் தடையுத்தரவை நாங்கள் மதிக்கப் போவதில்லை என்று கூறி பல்வேறு குழுவினரும் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். பெங்களூரு டவுன்ஹால் மற்றும் மெஜஸ்டிக் அருகே உள்ள மைசூர் வங்கி சர்க்கிள் போன்றவற்றில் தொடர்ந்து போராட்டங்கள் காலை முதல் நடைபெற்று வருகின்றன.
இவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். மற்றொரு பக்கம் டவுன்ஹால் பகுதியில் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா மகாத்மா காந்தி புகைப்படத்தை ஏந்தி தர்ணா போராட்டம் நடத்தினார். அவரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்ற முற்பட்டனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தபோது போலீசார் அவரை முதியவர் என்றும் பாராமல் இழுத்துச் சென்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆளும் ஆட்சியாளர்கள் சொல்வதைக் கேட்பது தான் காவல்துறையின் பணி என்ற போதிலும் கூட, போலீசாரும் முதலில் தாங்களும் ஒரு இந்தியர்கள், மனிதர்கள் என்பதை புரிந்து கொண்டு புத்திசாலித்தனமாகவும், பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications