பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு.. NIA வெளியிட்ட 2 போட்டோ.. தகவல் அளித்தால் ரூ.10 லட்சம்!
பெங்களூர்: பெங்களூரில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்புடைய சந்தேக நபர்கள் 2 புகைப்படத்தை என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது. அவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் சன்மானம் தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 1ஆம் தேதியன்று, கர்நாடக மாநிலம் பெங்களூரில் அமைந்துள்ள பிரபல உணவகமான ராமேஸ்வரம் கஃபேயில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அந்த உணவகத்தில் இருந்த பலர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு: மேலும் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்டவராக சந்தேகிக்கப்படும் இருவர் பற்றிய விவரங்களை NIA தெரிவித்திருந்தது. தொடர்ந்து, கர்நாடகா, தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முசாவீர் ஷபீர் உசேனை தேடி வந்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவரை டெல்லியில் நேற்று கைது செய்தனர்.
மேலும் கைதான முசாவீர் ஷபீர் உசேன் வீட்டில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ அதிகாரிகள், முக்கிய ஆவணங்கள், பல்வேறு டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளான அப்துல் மதீன் அகமது தஹா, முஸ்ஸவ்வீர் ஹுசைன் ஷாசிப் ஆகியோரை என்.ஐ.ஏ அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

சந்தேக நபர்கள்: ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்துடன், அப்துல் மதின் அகமது தாஹா மற்றும் முஸ்ஸவ்வீர் ஹுசைன் ஷாசிப் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ சந்தேகிக்கிறது. எனவே அவர்கள் இருவர் பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்குரிய இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ள என்.ஐ.ஏ, இவர்களைப் பற்றிய எந்தவொரு தகவல்கள் கிடைத்தாலும் அது குறித்து தங்களுக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. புகைப்படங்களுடன், சந்தேக நபர்களின் தோற்றத்தைப் பற்றிய விவரங்களையும் என்.ஐ.ஏ வெளியிட்டுள்ளது.
மாறுவேடம்: இவர்களில் முஸாவிர் ஹுசைன் ஷகிப், ஜிம் பாடி உடலமைப்புடன் 6 அடிக்கு மேல் உயரம் உள்ளவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் இருவரும் தங்கள் அடையாளங்களை மறைக்கும் முயற்சியில், மாஸ்க், விக் மற்றும் போலி தாடி உள்ளிட்ட மாறுவேடங்களில் வலம் வரக்கூடும் என்றும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களில் ஒருவரான அப்துல் மதின் அகமது தாஹா, 'விக்னேஷ்' என்ற இந்து பெயரைக் கொண்ட ஆதார் அட்டையை பயன்படுத்தியதாகவும் என்.ஐ.ஏ தெரிவித்துள்ளது. முஸவ்வீர் ஹுசைன் ஷாசிப் முகமது ஜுனைத் சையத் என்ற பெயரில் போலி ஓட்டுநர் உரிமம் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
10 லட்சம் சன்மானம்: இவர்கள் இருவர் பற்றிய தகவல்களை தருபவர்களுக்கு 10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களை பற்றி தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் வெளியே கசியாமல் பாதுகாக்கப்படும் என்று கூறியுள்ள தேசிய புலனாய்வு முகமை தகவல் கொடுக்க வேண்டிய ஈமெயில் முகவரி மற்றும் தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது. [email protected] என்ற இமெயில் அல்லது 080 2951099, 890424110 ஆகிய தொலைபேசி எண்களுக்கு அழைத்து தகவல் கொடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications