Ranya Rao நான் நிரபராதி! ஜெயிலில் தூக்கமின்றி தவிக்கிறேன்! கோர்ட்டில் கதறிய ரன்யா ராவ்
பெங்களூர்: துபாயில் இருந்து தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகை ரன்யா ராவ், தான் ஒரு அப்பாவி என்றும் தன்னை வேண்டுமென்றே சிக்க வைத்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க கோர்ட்டில் தெரிவித்தார். மேலும் தனக்கு தூக்கம் வராததால் கண்கள் வீங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகை ரன்யா ராவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது. கடந்த 3ஆம் தேதி துபாய் சென்றுவிட்டு பெங்களூர் திரும்பிய நடிகை ரன்யா ராவை வருவாய் புலனாய்வு துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அவர் 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தனது வாக்குமூலத்தில் துபாய்க்கு செல்லும் தகவல்களை எல்லாம் ஒரு கும்பல் தனக்கு தெரிவிப்பார்கள் என்றும் அதன் பேரில் தான் சென்று தங்கத்தை கடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
தங்கக் கடத்தலுக்காக பிரத்யேக உடையை அணிந்து கொண்டு சென்றதாகவும் அவர் தெரிவித்திருந்தார். விமான நிலைய சோதனையிலிருந்து தப்ப தான் ஏடிஜிபியின் மகள் என கூறியதால் அவரை சோதனை செய்யாமலேயே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் ரன்யா ராவின் கண்கள் வீங்கி, முகத்தில் காயங்கள் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனால் அவரை விசாரணையின் போது அதிகாரிகள் அடித்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் தனது கண்கள் துபாய் செல்வதற்கு நீண்ட நாட்களுக்கு முன்பே வீங்கியிருந்ததாக ரன்யா தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரன்யாவுக்கு சிறையில் தூக்கம் வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் தூங்காமல் விழித்திருப்பதால் அவருடைய கண்கள் வீங்கியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ரன்யா ராவ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட போது கதறி அழுதார்.
"நான் எப்படி இந்த விவகாரத்திற்குள் வந்தேன் என இப்போது வரை எனக்கு புரியவில்லை, நான் இந்த கடத்தலில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன். என்னால் தூங்கவே முடியவில்லை" என நீதிமன்றத்தில் கூறியபடியே கதறி அழுதார்.
துபாயில் தங்கத்தை கடத்தினால் ஒரு கிலோவுக்கு ரூ 5 லட்சம் கமிஷன் என்றும் துபாயிலிருந்து எப்படி சென்னைக்கு தங்கத்தை கடத்துவார் என்பது குறித்து ரன்யா ராவ் போலீஸ் விசாரணையில் தெரிவித்திருந்ததாக சொல்லப்படும் நிலையில், அவர் தனக்கு சம்பந்தமே இல்லை என கோர்ட்டில் அழுதிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரன்யா கட்டட கலை நிபுணர் ஒருவரை அண்மையில் பெங்களூர் தாஜ் ஹோட்டலில் ஆடம்பரமாக திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 3 மாதங்களில் சிறை சென்றுள்ளார் ரன்யா. இந்த கடத்தலில் அரசியல்வாதிகள் சிலருக்கும் தொடர்பிருக்கலாம் என சொல்லப்படுகிறது. விசாரணையின் போது பல உண்மைகள் வெளிவரலாம் என கூறப்படுகிறது. ரன்யா ராவுடன் அவரது கணவர் ஜதினும் அடிக்கடி துபாய் சென்றாராம். அவரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படலாம் என தெரிகிறது.
ரன்யா ராவ் தங்கத்தை கடத்தும் போது சிக்காமல் இருந்திருந்தால் அவருக்கு ரூ 75 லட்சம் கமிஷனாக கிடைத்திருக்கும். இந்த நிலையில் இன்றைய தினம் அவருடைய ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறுகிறது. இதில் அவருக்கு ஜாமீன் கிடைக்குமா இல்லையா என்பது தெரியவரும்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications