லண்டனுக்கு பறக்கும் கோலிக்காக.. அவசர அவசரமாக ஆர்சிபி விழா நடத்தப்பட்டதா? அதிர வைக்கும் பின்னணி
பெங்களூர்: நேற்று ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் அவசர அவசரமாக நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுவாக கிரிக்கெட் அணிகள் வெற்றிபெற்றால் அதற்கு வெற்றிகொண்டாட்டம் சில நாட்களுக்கு பின் நடக்கும் . இந்திய அணி டி 20 உலகக்கோப்பை வென்ற பின் 5 நாட்கள் கழித்து கொண்டாட்டம் நடந்தது. சிஎஸ்கே மும்பை அணிகள் வென்றால் 3 -4 நாட்கள் கழித்த கொண்டாட்டம் நடக்கும். ஆனால் நேற்று பெங்களூர் அணி கோப்பை வென்ற மறுநாளே கொண்டாட்டம் நடந்தது.

கிரிக்கெட் வீரர் கோலி லண்டனில் வசிக்கிறார். அவர் லண்டன் செல்ல திட்டமிட்டுள்ளார். இன்று அல்லது நாளையே லண்டன் செல்வார் என்று கூறப்படுகிறது. அவர் லண்டன் செல்ல வசதியாக அவசர அவசரமாக இந்த விழா நடத்தப்பட்டதாக விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முக்கியமாக இந்த விழா குறித்து தங்களுக்கே தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று ஐபிஎல் நிர்வாகம் கூறி உள்ளதால்.. விழாவை அவசர அவசரமாக நடத்த சொன்னது யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பெங்களூருவில் நேற்று நடந்த ஆர்சிபி அணியின் கொண்டாட்டத்தின்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாலை 6:37 மணியளவில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில், ரசிகர்கள் காயம் அடைந்தனர். கே.எஸ்.சி.ஏ மைதானத்தில் (KSCA) ஆர்சிபி அணியின் (RCB) வெற்றி ஊர்வலம் நடைபெற இருந்தது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர்.
ரசிகர்கள் வருகை
ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பே, மதியம் 3:00 மணியளவில் ரசிகர்கள் மைதானத்தில் கூட ஆரம்பித்தனர். ஏராளமான ரசிகர்கள் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வீரர்களை பார்ப்பதற்காகவும், அவர்களின் வெற்றியை கொண்டாடவும் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
தள்ளுமுள்ளுவின் காரணம்
கேட்களை திறந்தவுடன், கட்டுக்கடங்காத கூட்டம் உள்ளே செல்ல முயன்றதால் நிலைமை மோசமடைந்தது. இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் அங்கு பெரும் குழப்பம் நிலவியது. அதிகப்படியான ரசிகர்கள் ஒரே நேரத்தில் வந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
கூடுதல் கூட்ட நெரிசல்
அனுமதிக்கப்பட்ட டிக்கெட் மற்றும் பாஸ் வைத்திருந்தவர்களை விட, அணியின் வீரர்களைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் திரண்டனர். அரசாங்கத்திற்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட தகவலின்படி, மைதான வளாகத்திற்கு அருகிலுள்ள வடிகால் மீது அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கான்கிரீட் தளம் மீது அதிகப்படியான மக்கள் நின்றதால் இடிந்து விழுந்தது. இதனால் ஏற்பட்ட பதற்றத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த சம்பவம் குறித்து அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உயிரிழப்புகளை உறுதிப்படுத்தினார். நான் இப்போது எதையும் உறுதிப்படுத்த முடியாது. நான் மைதானத்திற்கு சென்று கொண்டிருக்கிறேன். நிறைய ரசிகர்கள் உணர்ச்சிவசமாக இருக்கிறார்கள்... நாங்கள் 5,000 வீரர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தி இருந்தோம், என்று அவர் பேட்டியில் தெரிவித்தார்.
எம்.ஜி. சாலை, கியூபான் பார்க், பி.ஆர். ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தனர். இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளை நடத்தும் போது, அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து நேரில் பார்த்த சாட்சியம் ஒருவர் கூறுகையில், "பெங்களூருவில் ஆர்சிபி அணிக்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. இது ஒரு பேரணியைப்போல் இருந்தது," என்று தெரிவித்தார்.
இந்த தள்ளுமுள்ளு சம்பவம், வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை திட்டமிடும்போது கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. ரசிகர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது அவசியம்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications