பெங்களூரில் வதைக்கும் வெயிலுக்கு குட்பை.. கொட்ட போகுது மழை.. பொதுமக்கள் செம ஹேப்பி!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், சற்றே நிம்மதி தரும் வகையில் வரும் நாட்களில் அங்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பெங்களூரில் மிகக் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. தண்ணீர் பஞ்சம் கோடையில் மேலும் மோசமாகலாம் என்று அஞ்சப்படுவதால் தண்ணீர் பயன்பாட்டிற்குக் கட்டுப்பாடுகள் கூட விதிக்கப்பட்டது.

இதனால் பெங்களூர் மக்கள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கும் திரும்பி வருகிறார்கள்.
மழை இருக்கு: இதற்கிடையே ஒரு வழியாகப் பெங்களூருக்குச் சற்று நிம்மதி தரும் செய்தி கிடைக்கப் போகிறது. அங்கே யுகாதிக்குப் பிறகு லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
ஏப்ரல் மாதம் தெற்கு உள் கர்நாடகத்தில் இயல்பை விட குறைவான மழையே இருக்கும் என்று முன்பு கணிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இப்போது வந்துள்ள புதிய கணிப்பு அதற்கு நேர்மாறாகவே இருக்கிறது. பெங்களூரு மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் கோடை மழை இயல்பான அளவுக்கு இருக்கும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.
நிம்மதி: மழை குறித்த இந்த கணிப்பு பெங்களூர்வாசிகளுக்கு நிம்மதி தருவதாக இருக்கிறது. பெங்களூரு மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் ஏப்ரல் இரண்டாவது வாரத்தில் இருந்து இடியுடன் கூடிய கோடை மழை பெய்யும் வானிலை மையம் கணித்துள்ளது. உகாதி நாளன்று பெங்களூரில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் லேசான மழையுடன் இது தொடங்கும் என்றும் பண்டிகைக்குப் பிறகு மிதமான மழை பெய்யும் என்றும் ஐஎம்டி பெங்களூருவின் மூத்த ஆய்வாளர் ஏ பிரசாத் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் முழுவதும் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பெங்களூரு முழுவதும் மழை சீராக இல்லாவிட்டாலும், சில பகுதிகளில் சராசரிக்கும் அதிகமான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. யுகாதிக்கு பிறகு மழை என்பது நல்ல செய்திதான் என்றாலும் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். "பெங்களூரு மற்றும் அதை ஒட்டிய மாவட்டங்களில் வெப்ப அலை நிலைகள் நீடிக்க வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
இரவிலும் உச்சம் தொடும் வெப்பம்: பெங்களூருவில் இப்போது ஏப்ரல் மாத சராசரி வெப்பத்தை விட 3 டிகிரி அதிகமாக வெப்பம் பதிவாகிறது. வார இறுதியில் வெப்பம் சற்று அதிகரிக்கும் என நிபுணர்கள் கணித்துள்ளனர். பெங்களூர் அதீத வெப்பத்தாலும் தண்ணீர் பஞ்சத்தாலும் தள்ளாடி வரும் நிலையில், இந்த திடீர் கோடை மழை பெங்களூர் மக்களுக்கு நிம்மதியைத் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரில் இப்போது பகல் நேரத்தில் வெப்பம் புதிய உச்சம் தொடுகிறது. வெளியே சென்றாலே வேர்த்து விறுவிறுத்தே திரும்ப வேண்டி இருக்கிறது. அதேபோல இரவு நேரங்களிலும் புழுக்கம் தொடர்வதால் இரவு தூங்கக் கூட முடிவதில்லை என்று புலம்புகிறார்கள் பெங்களூர் மக்கள். கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத வகையில் கடந்த வாரம் இரவு நேரங்களில் வெப்பம் அதிகமாக இருந்ததாம். பகல் மற்றும் இரவு என்று வெப்பம் தொடர்ந்து இந்தளவுக்கு அதிகமாக இருந்தால் அது உடல்நிலை பாதிப்புகளையும் கூட ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
என்ன காரணம்: இது குறித்து வல்லுநர்கள் கூறுகையில், "ஏப்ரல் மாதத்தில் பெங்களூரில் சாதாரண இரவுநேர வெப்பம் சுமார் 21-22 டிகிரி செல்சியஸ் ஆகும். இருப்பினும், சமீபத்திய இரவுகளில் வெப்பம் உயர்ந்து, 24.5 டிகிரி செல்சியஸை எட்டியுள்ளது. கடந்த வாரம் 24.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. இரவு நேரங்களில் நகரத்தின் மேல் அதிக மேகங்கள் இருப்பதே இதற்குக் காரணமாகும். மேகங்கள் இல்லை என்றால் இரவுகள் வழக்கமான கோடையில் குளிர்ச்சியாக இருக்கும்" என்றார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications