Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆர்சிபி ரசிகர்களின் லட்சணம்.. கடும் கூட்டத்திற்கு இடையே பெண்களுக்கு பாலியல் தொல்லை.. கொடுமை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது பெண்கள் பலர் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக புகார்கள் வைக்கப்படுகின்றன.

நேற்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

RCB ipl 2025 2025

சம்பவத்தின் பின்னணி

இந்த குழப்பமான சூழ்நிலையில், நெரிசலின்போது ஒரு இளம் பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, பாதுகாப்பு குறைபாடு மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்த தவறியது குறித்து தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாக பரவி, கண்டனங்களையும், விமர்சனங்களையும் வலுக்கச் செய்துள்ளது.

இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். பாலியல் துன்புறுத்தல் சம்பவம் பொதுமக்களின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க, பெரிய பொதுக்கூட்டங்களில் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு கிரிக்கெட் வெற்றியை சாதாரணமாக கொண்டாடாமல், திருவிழா போல அரசே கொண்டாடியதன் விளைவாக இந்த மரணங்கள் ஏற்பட்டு உள்ளன. அதிலும் கடந்த சில நாட்களாகவே ஆர்சிபி ரசிகர்கள் பொது இடங்களில் அடாவடி தனமாக, ஒழுக்கம் இன்றி கொண்டாடியதன் விளைவு நிலைமை மோசமாக காரணமாகிவிட்டது.

ரசிகர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கடுமையாக சாலைகளில் அடாவடித்தனமாக கொண்டாட்டங்களை மேற்கொண்டது, விதிகளை மதிக்காமல் கொண்டாடியது, போலீஸ் விதித்த கட்டுப்பாடுகளை மீறியது ஆகியவை அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. மும்பை, சென்னை போன்ற அணிகள் 10 கோப்பைகளை வென்ற போது நடக்காத இது போன்ற சம்பவம்.. பெங்களூர் அணி வென்ற முதல் கோப்பையிலேயே நடந்து உள்ளது.

சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் வெற்றி விழாவைக் காண ஏராளமான ரசிகர்கள் மைதானத்தில் குவிந்தனர். மாலை 3:00 மணிக்கே ரசிகர்கள் மைதானத்தின் வாயில்களில் கூட ஆரம்பித்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதனால், மைதானத்தைச் சுற்றியுள்ள எம்.ஜி.சாலை, கியூன்ஸ் சாலை, பிரிகேட் சாலை, சிவாஜி நகர், பன்னர்கட்டா சாலை, மற்றும் பி.ஆர்.ஸ்டேஷன் போன்ற பகுதிகளில் அதிகப்படியான கூட்டம் காணப்பட்டது.

தள்ளுமுள்ளும் காயங்களும்

அதிகப்படியான ரசிகர்களின் வருகையால் ஏற்பட்ட தள்ளுமுள்ளில் பலர் காயமடைந்தனர். சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்த அசம்பாவிதத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. கே.எஸ்.சி.ஏ (KSCA) மைதானத்திற்குள் ரசிகர்களை அனுமதிக்கும் முன் சரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனப் பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

பெங்களூருவில் இதுபோன்ற பெரிய நிகழ்வுகளை நடத்தும் போது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வது அவசியம் என்று காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த துயர சம்பவம், விளையாட்டு வெற்றிக் கொண்டாட்டங்களில் பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறைகளின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை உணர்த்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+