‛பக்தி’.. ரிஷி சுனக்கின் தாய் உஷா சுனக் இவர் தான்! பாஜக எம்எல்ஏ வீட்டில் செய்த பூஜையை பாருங்க! அடடே
பெங்களூர்: பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கின் தாயாரான உஷா சுனக் பெங்களூரில் பாஜக எம்எல்ஏவின் வீட்டில் நடந்த ஜென்மாஷ்டமி விழாவில் பங்கேற்றார். அவருடன் பாஜகவினர் மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் விழாவில் பங்கேற்றனர்.
டெல்லியில் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடந்தது. இந்த ஆண்டுக்கான உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றது. இதனால் இந்த மாநாடு என்பது டெல்லியில் நடந்தது. பிரதமர் மோடி தலைமையேற்று நடத்தினார்.

இந்த மாநாட்டில் ஜி20 அமைப்பில் உள்ள வெளிநாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் உள்பட பல்வேறு சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக கூற வேண்டும் என்றால் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ஏராளமான தலைவர்கள் தங்களின் குடும்பத்துடன் வந்திருந்தனர்.
இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், பிரிட்டன் பிரதமருமான ரிஷி சுனக் தனது மனைவி அக்சதா மூர்த்தி, தாய் உஷா சுனக் உள்ளிட்டவர்களுடன் இந்தியா வந்தார். ரிஷி சுனக்குடன் அக்சதா மூர்த்தி டெல்லியில் இருந்தார். அதே வேளையில் தாய் உஷா சுனக் பெங்களூர் சென்றார். அங்கு உஷா சுனக்கை ரிஷி சுனக்கின் மாமியாரான சுதா மூர்த்தி (இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி) வரவேற்றார்.
அதன்பின்னர் உஷா சுனக்கும், சுதா மூர்த்தியும் பெங்களூரு சிக்பேட்டை தொகுதி பாஜக எம்எல்ஏ உதய் கருடாச்சார் வீட்டில் நடந்த ஜென்மாஷ்டமி விழாவில் பங்கேற்றார். வீட்டில் கிருஷ்ண அவதாரங்கள், லீலைகள் தொடர்பான கொளு பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்த நிலையில் அதுபற்றிய விபரங்களை சுதா மூர்த்தி, எம்எல்ஏ உதய் கருடாச்சார் உள்ளிட்டவர்கள் உஷா சுனக்கிற்கு விளக்கி கூறினர்.
சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பிறகு குங்குமத்தை வாங்கி உஷா சுனக் தனது நெற்றியில் வைத்து கொண்டார். இந்த விழாவில் உஷா சுனக்குடன் சேர்ந்து விழாவில் பாஜகவினர், ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த மஞ்சுநாத் உள்பட இன்னும் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். அவர்கள் உள்பட அந்த பகுதி மக்களிடம் உஷா சுனக் கலந்துரையாடினார்.
பிரிட்டன் பிரதமரான ரிஷி சுனக் மற்றும் அவரது குடும்பம் தீவிரமான கிருஷ்ண பக்தர்களாக உள்ளனர். வீட்டில் கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜை செய்யும் வழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு ரிஷி சுனக் பகவத்கீதையை படிப்பதாகவும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி டெல்லியில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க வந்த ரிஷி சுனக் நேற்று தனது மனைவி அக்சதா மூர்த்தியுடன் அக்சர்தம் கோவிலுக்கு சென்று தீபாராதனை காண்பித்து வழிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications