பெங்களூர் - மைசூர் ஹைவேயில் இரவில் நடக்கும் சம்பவம்.. வாகன ஓட்டிகளே அலர்ட்! இப்படி கூட செய்வாங்களா
பெங்களூர்: பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் சாலையில், சாலையின் நடுவே மரத்துண்டுகள், இரும்பு கம்பிகள் வைத்து வாகனங்களை கவிழ்க்க முயற்சிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. கொள்ளை நோக்கில் திட்டமிட்டு வாகனங்களை விபத்துக்குள்ளாக்கும் சதி நடப்பதாக ஏற்கனவே புகார் இருக்கும் நிலையில் மீண்டும் அதே மாதிரியான சம்பவங்கள் அதிகரித்து இருப்பது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலைகளில் நடைபெறும் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து இருப்பதாக அண்மைக்காலமாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதிலும் வெளி மாநிலங்களுக்கு செல்லும் போது இத்தகைய திருட்டு பயம் அதிமாக இருக்கிறது என்பது லாரி டிரைவர்கள் மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் வாகனங்களை இயக்கும் டிரைவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. இந்த நிலையில், பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் வே சாலையில் வாகனங்களை விபத்துக்கு உள்ளாக்கி கொள்ளை சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு அதிகரித்துள்ள நிலையில் தற்போது அது தொடர்பான அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
பெங்களூர் - மைசூர் எக்ஸ்பிரஸ் சாலையில் கெங்கேரி என்ற இடத்தில் சாலையில் மரத்துண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சாலையின் வலது ஓரத்தில் டிவைடரை ஒட்டி வைக்கப்பட்டு இருக்கும் இந்த மரத்துண்டுகளை கவனிக்காமல் வாகன ஓட்டிகள் ஏற்றினால் வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. இப்படி விபத்தை ஏற்படுத்தி திருடும் முயற்சியில் கொள்ளை கும்பல் ஈடுபடுவதாக வாகன ஓட்டிகள் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர்.
காரில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது காரில் இருந்த கேமரா படம் பிடித்த காட்சிகளையும் வெளியிட்டு தனது எக்ஸ் தளத்தில் இது தொடர்பாக பதிவிட்டுள்ளார். வாகன ஓட்டிகளின் உயிரை பற்றி துளி கூட கவலையின்றி கொள்ளையர்கள் செய்யும் இந்த கொடூர செயல்கள் பெரும் அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் நடைபெறும் இதுபோன்ற கொள்ளை முயற்சிகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகளை போலீசார் எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

அதேபோல வெளிமாநில பதிவெண் கொண்ட லாரிகள் சென்றாலும் அவர்களிடம் வேண்டும் என்றே வம்பிழுத்து திருடும் சம்பவங்கள் நெடுஞ்சாலைகளில் நடப்பதாக வாகன ஓட்டிகள் கூறியுள்ளனர். எனவே நெடுஞ்சாலைகளில் பயணம் மெற்கொள்ளும் பயணிகள் குறிப்பாக இரவு நேரத்தில் செல்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ரோந்து பணிகளை அதிகரித்து, இத்தகைய கொள்ளையில் ஈடுபடுவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
மேகதாதுவின் மோதலும்.. பெங்களூருவின் வலியும்.. தமிழகத்தை பாதிக்காமல் மாற்று வழி உள்ளதா? -
ராசிபுரம் அருகே துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்.. நகைகளுடன் 2 பேர் கைது! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications