பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பெங்களூரில் சப்பாத்தி சரிபட்டு வரல போல... ஸ்டெப்னி டயரில் ரூ.2.3 கோடி பணம் சிக்கியது

Google Oneindia Tamil News

பெங்களூரு: லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு விதத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய அரசியல் கட்சி முயற்சித்து வருகின்றன. அந்த வகையில், சப்பாத்திக்குள் பணத்தை வைத்து கடத்தினர்.

இப்போது, காரின் ஸ்டெப்னி டயரில் கத்தை, கத்தையாக பணத்தை வைத்து, வாக்காளர்களுக்கு வினியோகிக்க சென்றப் போது பிடிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.கர்நாடகாவில் வருமான வரித்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், பெங்களூருவிலிருந்து சிமோகா செல்லும் சாலையில் வந்த காரை மடக்கி நேற்று சோதனையிட்டனர்.

Rs 2.30 cr in cash stuffed inside the spare tire in a car seized by Income-Tax officials.

வருமான வரி சோதனை நடந்தது ஏன்?... எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில் வருமான வரி சோதனை நடந்தது ஏன்?... எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பிரதமர் மோடி பதில்

அப்போது காரின் ஸ்டெப்னி டயரில் 2, 000 நோட்டுகளாக 2.3 கோடி பணம் பதுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சரியான ஆவணங்கள் இல்லாததால் இப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், வாக்காளர்களுக்கு தருவதாக பாகல்கோட் பகுதியில் வங்கி அதிகாரி ஒருவர் அவரது வீட்டில் பதுக்கி இருந்த 1 கோடி பணத்தையும் வருமான வரித்துறை பறி முதல் செய்தது.

இதே போல, கர்நாடகா- கோவா மாநில எல்லையில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களில் வரும் 23ம் தேதி 3-ம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வருமானவரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கணக்கில் வராத பணம் ரூ.4 கோடியை பறிமுதல் செய்தனர்.

English summary
Rs 2.30 cr in cash stuffed inside the spare tire in a car seized by Income-Tax officials. The cash was being transported from Bengaluru to Shivamogga
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X