23 அட்டை பாக்ஸில் சிக்கிய ரூ.42 கோடி! பெங்களூர் மாஜி கவுன்சிலர் வீட்டில் மலைக்க வைத்த ஐடி ரெய்டு
பெங்களூர்: பெங்களூரில் இரவோடு இரவாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த நிலையில் 23 அட்டை பெட்டிகளில் கட்டுக்கட்டாக ரூ.42 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர் சுல்தான் பாளையாவில் வசித்து வருபவர் அம்பிகாவதி. இவர் பெங்களூர் மாநகராட்சியின் ஒப்பந்ததாரர் சங்கத்தின் துணை தலைவராக உள்ளார்.

இவரது மனைவி அஸ்வதம்மா. இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் ஆவார். பெங்களூர் மாநகராட்சியின் 95வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். இந்நிலையில் தான் அவர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அஸ்வதம்மா கடந்த 2001ம் ஆண்டு பெங்களூர் காவல் பைரசந்திரா வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதோடு இவர் முன்னாள் எம்எல்ஏவான அகண்ட சீனவாச மூர்த்தியின் சம்பந்தி ஆவார்.
இந்நிலையில் அம்பிகாவதி-அஸ்வதம்மாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்தப்பட்டது. பெங்களூர் சுல்தான் பாளையாவில் உள்ள 2 வீடுகள், காவல் பைரசந்திராவில் உள்ள அடுக்குமாடி வீடு, ஆத்மானந்தா காலனியில் அஸ்வதம்மா பெயரில் உள்ள அவரது தம்பி பிரதீப்பின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி ஆய்வுகளை தொடங்கி உள்ளனர்.
இந்த வேளையில் ஒரு வீட்டு அறையில் இருந்து அட்டைப்பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மொத்தம் 23 அட்டை பெட்டிகளில் பணம் இருந்தது. இதனை கைப்பற்றி அதிகாரிகள் எண்ணிப்பார்த்தனர். ஒவ்வொரு அட்டைப்பெட்டியிலும் ரூ.1 கோடியே 65 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. அப்போது மொத்தம் ரூ.42 கோடி பணம் இருப்பது தெரியவந்தது.
மேலும் காரிலும் பணம் இருந்தது. அதில் இருந்தும் பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இப்படி ரூ.42 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளன. விரைவில் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த உள்ளது.
தற்போது வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டுள்ள அம்பிகாவதி கடந்த 8 ம் தேதி தான் முதல்வர் சித்தராமையாவை சந்தித்தார். அப்போது பெங்களூர் மாநகராட்சியின் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய பணத்தை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இத்தகைய சூழலில் தற்போது அவரது வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications