ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை.. அட, 2000 ரூபாய் வரப்போகுதே.. கர்நாடகா அரசு தந்த நம்பிக்கை.. பெண்கள் குஷி
பெங்களூர்: ஆட்சி அமைத்து மாதக்கணக்காகியும், இதுவரை மகளிருக்கான உரிமைத்தொகையை முழுமையாக வழங்கவில்லையே என்ற புகார்கள் கர்நாடக மாநிலத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கிய நிலையில், தற்போது நிம்மதி செய்தி ஒன்று கிடைத்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், எத்தனையோ வாக்குறுதிகளை ராகுல் காந்தி பிரச்சாரத்தின்போது வழங்கியிருந்தார்.. ஆனால், அதில் பெரும்பாலானோரை ஈர்த்தது, ஒரே ஒரு விஷயம்தான்..
ராகுல் காந்தி: "நான் இப்போது ஒரு வாக்குறுதியை உங்களுக்கு தருகிறேன். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால், முதல் நாளிலிருந்து பெண்கள் அரசு பேருந்தில் இலவச பயணம் செய்யும் திட்டம் அமல்படுத்தப்படும்".. அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று அடுக்கடுக்காக ராகுல் அறிவித்திருந்தார்.

திமுக ஸ்டைல்: இதெல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலின் நமக்கு தெரிவித்த வாக்குறுதிகளாகும்.. இதில், பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கும் திட்டத்தை முதல்நாளே, கையெழுத்து போட்டு அமல்படுத்தியிருந்தார் ஸ்டாலின்.. அதே ஸ்டைலில் ராகுலும் வாக்குறுதி தந்தது, கர்நாடக மக்களை வெகுவாக கவர்ந்திருந்தது.. எதிர்பார்த்ததைபோலவே காங்கிரஸும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 வழங்கும் க்ருஹ லக்ஷ்மி திட்டம், ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்போவதாகவும், தகுதியுள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இந்த 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவித்திருந்தார். பிறகு, பிபி பில் மற்றும் அந்தியோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
வெப்சைட்கள்: குடும்பத் தலைவிகள் சேவா சிந்து போர்ட்டல் மூலமாக மற்றும் https://sevasindhu.karnataka.gov.in/Sevasindhu/Englishஎன்கிற இணையதள முகவரி பக்கத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது..
அதுமட்டுமல்ல, குடும்பத்தில் யாரேனும் வரி செலுத்துவோராக இருந்தால், இந்த விண்ணப்பங்கள் நிராகரிப்பு செய்யப்படும் என்றும், இந்த திட்டம் குறித்து யாருக்காவது ஏதாவது சந்தேகம் இருந்தால் 1902 என்கிற உதவி எண்ணை அழைக்கலாம் என்றும் கூடுதலாக அறிவிக்கப்பட்டது.
அறிவிப்புகள்: மொத்தம் 1.2 கோடி பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பலனடைவார்கள் என்றும், இதற்காக அரசு 2,119 கோடி தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இவ்வளவும் சொல்லிவிட்டு, 2000 ரூபாய் பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்வதற்கு கடைசி தேதி என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை... இதுவரை இந்த உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்தவும் இல்லை. காரணம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த திட்டத்தை முழுவதுமாக செயல்படுத்துவதில் சிக்கல்கள் நிலவுவதாக தெரிகிறது.
அதனால், இதுகுறித்து பெண்கள் புகார்களை அம்மாநில அரசுக்கு அனுப்ப துவங்கிவிட்டார்கள். இத்தனை நாள் ஆகியும், முதல் மாத தவணை கூட கிடைக்காமல் இன்னும் பல லட்சம் பெண்கள் உள்ளனர்.. விரைவில் தீபாவளி பண்டிகையும் வந்துவிடுவதால், நவம்பர் மாதத்திற்கான உதவித்தொகையை, தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்
நம்பிக்கை: இந்நிலையில், இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். நவம்பர் மாதத்திற்கான தொகை 15ம் தேதிக்குள் பயனாளர்களின் வங்கி கணக்கு செலுத்தப்படும் என்று உறுதி தந்துள்ளார்..
அரசு தொகை விடுவித்த உடனேயே, அடுத்த 6 நாட்களில் மக்களின் கைக்கு கிடைக்கும் வகையில் உரிமைத்தொகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுவரை பணம் கிடைக்காத நபர்களுக்கு விரைவில் தொகை சேர்த்து வழங்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுவரையில் உதவித்தொகை கிடைக்காத பெண்கள் கவலைப்படாமல் காத்திருக்க வேண்டும் என்றும், தகுதியுள்ள நபர்களுக்கு கட்டாயம் மாதந்தோறும் 2000 ரூபாய் நிதி வந்து சேரும் என்றும் மற்றொரு உறுதியை அமைச்சர் அளித்துள்ளதால், பெண்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: நமக்கு அப்படியில்லை.. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் பயனாளர்களுக்கு தீபாவளியை முன்னிட்டு முன்கூட்டியே உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.. அனைவருக்கும் பணம் வரவு வைக்கும் பணிகளும் தொடங்கிவிட்டன. தீபாவளிக்கு முன்பேயே உரிமைத்தொகை கிடைத்து வருவதால், தமிழக பெண்கள் உற்சாகமாகி உள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications