ஏ ஆர் ரஹ்மானுக்கு இப்படிப்பட்ட ஆசையா?.. "வெறித்தனத்தை" புட்டு புட்டு வைத்த மனைவி சாயிரா பானு
பெங்களூர்: ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மானின் மறுபக்கம் குறித்து அவரது மனைவி சாயிரா பானு விவரித்தார். சாதுவான ரஹ்மான் இப்படிப்பட்டவரா எனும் அளவுக்கு சாயிராவின் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது.
ஏ ஆர் ரஹ்மான் சின்ன சின்ன ஆசை மூலம் அறிமுகமான அவர் இன்று பல மொழிகளில் இசையமைத்து வருகிறார். முகத்தில் சாப்ட் லுக், பேச்சிலும் சாப்ட், கூச்ச சுபாவம் கொண்ட ரஹ்மான் இசையின் மீதும் தொழிலின் மீதும் கொண்ட அளவு கடந்த அன்பால் ஆஸ்கர் விருதை பெறும் அளவுக்கு உயர்ந்தார்.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாமல் அதிகம் பேசாதவர் ரஹ்மான். அப்படிப்பட்ட அவரது மறுபக்கம் குறித்து மனைவி சாயிரா பானு விவரித்துள்ளார்.

மறுபக்கம்
நடிகை சுஹாசினி தொகுத்து வழங்கும் ஒரு டிவி நிகழ்ச்சியில் ரஹ்மானும் சாயிரா பானுவும் கலந்து கொண்டார்கள். அப்போது பல்வேறு கேள்விகளுக்கு அவர்கள் இருவரும் பதிலளித்தார்கள். பின்னர் ஏ ஆர் ரஹ்மானின் மறுபக்கம் குறித்து சொல்வதாக சாயிரா பானு கூறினார்.

சுஹாசினி
இதை கேட்டதும் சொல்லுமாறு மிகவும் ஆர்வமாக சுஹாசினி சொன்னார். சாயிரா கூறுகையில் மற்ற கணவன் மனைவி போல் நாங்கள் இருவரும் பைக்கில் ரவுண்ட் செல்வோம். அவருக்கு பைக் ஓட்டுவது என்றால் அத்தனை பிரியம். விதவிதமான பைக்குகளை ஓட்டி பார்க்க ஆசைப்படுவார்.

ஆசை
வீட்டிலிருக்கும் பைக்கை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் நாங்கள் இருவரும் ரவுண்ட் செல்வோம். அதிலும் ரஹ்மான் ஹெல்மெட் கூட அணிய மாட்டார். என்னை அவர் எப்போதும் பைக்கில் அழைத்து செல்வதையே விரும்புகிறேன். அவரும் எனது ஆசையை அவ்வப்போது நிறைவேற்றிவிடுவார் என்றார் சாயிரா.

உண்மைதான்
இதை கேட்டதும் சுஹாசினி ஸ்டன்னாகி போய் நின்றார். பின்னர் ஆசுவாசப்படுத்திக் கொண்ட சுஹாசினி, சாயிரா சொல்வதெல்லாம் உண்மைதானா என ரஹ்மானிடம் கேட்டார். அதற்கு ரஹ்மான் உண்மைதான். நள்ளிரவு நேரங்களில் பைக்கில் எனது மனைவியை அழைத்து கொண்டு செல்வேன்.

குழந்தைகள்
பொது மக்கள் பார்த்துவிடக் கூடாது என்பதற்காகவும் டிராபிக்கில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகதான் இரவு நேரங்களை தேர்வு செய்து நாங்கள் பைக்கில் செல்வோம். எனது குழந்தைகளின் தாயாக நான் எனது மனைவியை விரும்புகிறேன். அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என ரஹ்மான் வெட்கத்துடன் தெரிவித்தார். இதனால் சாயிரா பானு மிகவும் பூரித்து போனார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications