29 ஆண்டுகளில் 161 படங்களில் ஹீரோயின்! அம்மா போட்ட கண்டிஷனை மீறாத சரோஜாதேவி! யார் இவர்?
பெங்களூரு: 'கன்னடத்துப் பைங்கிளி', 'அபிநய சரஸ்வதி' என்றெல்லாம் அழைக்கப்படும் நடிகை பி. சரோஜா தேவி, ஒரு பெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். 161 படங்களில் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த ஒரே இந்திய நடிகை இவர்தான்.
இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என்.டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், ராஜ்குமார், திலீப் குமார் போன்ற புகழ்பெற்ற நடிகர்களுடன் நடித்துள்ளார். பிற்காலத்தில், சூர்யா நடித்த 'ஆதவன்' போன்ற படங்களிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் தோன்றியுள்ளார்.

இவர் 1938-ஆம் ஆண்டு, ஜனவரி 7-ஆம் தேதி மைசூருவில் வொக்கலிகா சமூகத்தில் பிறந்தார். இவரது தந்தை பைரப்பா, காவல்துறை அதிகாரியாகப் பணியாற்றினார். தாய் ருத்ரம்மா, குடும்பத் தலைவியாக இருந்தார். இத்தம்பதிக்கு நான்காவது மகளாகப் பிறந்த சரோஜா தேவி, சிறு வயது முதலே நடனத்தில் தேர்ச்சி பெற்றார்.
கன்னட திரைப்படம்
தனது 17-வது வயதில், 1955-ஆம் ஆண்டு வெளியான 'மகாகவி காளிதாஸ்' என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். கன்னட சினிமாவின் முதல் 'பெண் சூப்பர் ஸ்டார்' ஆகக் கருதப்பட்ட இவர், தொடர்ந்து 'நாடோடி மன்னன்' (1958) படத்தில் எம்.ஜி.ஆருடனும், 'பாண்டுரங்க மகாத்மியம்' என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
29 படங்கள்
1955 முதல் 1984 வரையிலான 29 ஆண்டுகளில், 161 திரைப்படங்களில் தொடர்ச்சியாகக் கதாநாயகியாக நடித்த ஒரே இந்திய நடிகை என்ற சாதனையை சரோஜா தேவி படைத்துள்ளார். இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகளைப் பெற்றுள்ளார். மேலும், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
இரு நிபந்தனை
தொடக்கத்தில், இவர் சினிமாவிற்கு வந்தது இவரது தாயாருக்குப் பிடிக்கவில்லை. பின்னர், இரண்டு நிபந்தனைகளுடன் அவரை நடிக்கச் சம்மதிக்க வைத்தார். 'நீச்சல் உடை அணியக் கூடாது' மற்றும் 'கையில்லாத ரவிக்கை அணியக் கூடாது' என்பதே அந்த நிபந்தனைகள். தனது தாயின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டு, சரோஜா தேவி மிகவும் கண்ணியமான கதாபாத்திரங்களில் நடித்தார்.
சிவாஜியுடன்
இவர் ஜெமினி கணேசனுடன் 'கல்யாண பரிசு', சிவாஜி கணேசனுடன் 'பாகப்பிரிவினை', 'பாலும் பழமும்', 'ஆலயமணி', 'புதிய பறவை' மற்றும் எம்.ஜி.ஆருடன் 'திருடாதே', 'பெரிய இடத்துப் பெண்', 'பணக்காரக் குடும்பம்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பே வா' உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.
எத்தனை படங்கள்
எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேசனுடன் 22 படங்களிலும், ஜெமினி கணேசனுடன் 17 படங்களிலும் இவர் நடித்துள்ளார். குறிப்பாக எம்.ஜி.ஆருடன் நடித்ததால் 'ராசியான நடிகை' என்ற பெயரையும் பெற்றார். 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பே வா' போன்ற படங்களில் இவர் அணிந்திருந்த புடவைகள், நகைகள் மற்றும் இவரது சிகை அலங்காரம் ஆகியவை அக்கால தென்னிந்தியப் பெண்களிடையே மிகவும் பிரபலமடைந்தன.
திருமண வாழ்க்கை
இவர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிய ஸ்ரீஹர்ஷா என்பவரை 1967-ல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். 19 ஆண்டுகள் நீடித்த இவர்களது திருமண வாழ்க்கை, 1986-ல் ஸ்ரீஹர்ஷாவின் மறைவோடு முடிவுக்கு வந்தது. அதன்பிறகு, பெங்களூரு மல்லேஸ்வரத்தில் வசித்துவரும் சரோஜா தேவி, தனது கணவர் பெயரிலான அறக்கட்டளைப் பணிகளைக் கவனித்து வருகிறார். இவர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications