சிறையிலிருந்து அல்ல.. மருத்துவமனையிலிருந்து ஸ்ட்ரெயிட்டா சென்னை செல்கிறார் சசிகலா?
பெங்களூர்: பெங்களூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்ட்ரெயிட்டாக சசிகலா சென்னைக்கு பயணம் செய்ய உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததன் காரணமாக 4 வருடம் சிறை தண்டனை பெற்று பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தவர் சசிகலா.
வரும் 27 ஆம் தேதி அவர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட வேண்டி இருந்தது. இந்த நிலையில்தான் நேற்று திடீரென அவருக்கு மூச்சு திணறல் பிரச்சினை ஏற்பட்டது.

சிடி ஸ்கேன் வேலை செய்யவில்லை
இதையடுத்து சிவாஜி நகர் பகுதியில் உள்ள பவுரிங் அரசு மருத்துமனையில் சசிகலா சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். பிறகு இன்று அவர் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிடி ஸ்கேன் இயந்திரம் வேலை செய்யவில்லை என்பதால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும், அங்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், மேலும் சில நாட்கள் அங்கேயே தங்கி இருப்பார் என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

காரில் சென்னை செல்கிறார்
சசிகலா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் தேதியும், சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டிய தேதியும் ஏறத்தாழ ஒரே நாளில் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. எனவே சசிகலா விக்டோரியா மருத்துவமனையில் இருந்து, கார் மூலம், ஓசூர், கிருஷ்ணகிரி, ஆம்பூர் வேலூர் வழியாக சென்னை செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறைக்கு பதில், மருத்துவமனை
சிறையில் இருந்து வெளியே வரும்போது அவருக்கு வரவேற்பு அளிக்க தொண்டர்கள் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால், இப்போது மருத்துவமனையிலிருந்து செல்லும்போது அவருக்கு வரவேற்பு கிடைக்க உள்ளது.

மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்
"சிறையில் கடும் அல்லலுக்கு ஆளானதால் அதன் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு உடல் நலம் தேறி தமிழகம் வருகிறார். எனவே தொண்டர்களிடையே எழுச்சியான வரவேற்பு இருக்கும்" என்று சொல்கிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர் ஒருவர்.

ஜெயலலிதா நினைவிடம்
27ஆம் தேதி சசிகலா ரிலீஸ் ஆகும்போது ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நடக்க உள்ளது. அதே நாளில் சசிகலா பெங்களூர் மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு காரில் செல்வார் என்று கூறப்படுகிறது.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications