ஷட்டரை திறந்தா.. குபுகுபுவென வந்த பெண்கள்.. சிறுசு முதல் பெருசு வரை.. குட்டுப்பட்ட "திருட்டுத்தனம்"
கர்நாடகாவில் ஒரு கடையில் திருட்டுத்தனமாக புடவை விற்பனை நடந்துள்ளது
பெங்களூரு: ஷட்டரை திறந்ததுமே ஏராளமான பெண்களும், ஆண்களும் முண்டியடித்து கொண்டு வெளியே வருகிறார்கள்.. கர்நாடகாவில் லாக்டவுனால் மூடப்பட்ட ஒரு துணி கடையில், புடவை விற்பனை அமோகமாக நடந்துள்ளது.. இந்த வீடியோதான் வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு ஆளான மாநிலங்களின் பட்டியலில் கர்நாடகா மூன்றாவது இடத்தில் உள்ளது. இங்கு ஏற்கனவே 2 வாரங்கள் ஊரடங்கு உத்தரவு போதிய பலனளிக்கவில்லை என்று தெரிகிறது.
அதனால்தான், தமிழகம் போலவே, கர்நாடகா மாநிலத்திலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளன.. இதையடுத்து சாலைகள் எல்லாம் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கண்டிப்பு
யாராவது தேவையில்லாமல் பைக்கில் சுற்றினால், அவர்களை போலீசார் விரட்டி கொண்டு போய் தடியால் அடித்து அனுப்பி வைக்கின்றனர்... சில இடங்களில் வார்ன் செய்து அனுப்புகின்றனர். 12:00 மணிக்கு பிறகு அங்கும் கடைகள் அடைக்கப்பட்டதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் முற்றிலும் குறைந்தது... ஊரடங்கு அமலுக்கு வந்ததால், வாகனங்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.. பஸ் போக்குவரத்து இல்லை..!

ஆஸ்பத்திரி
இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும் தொற்று குறையவில்லை.. அம்மாநில மருத்துவமனைகளில் படுக்கைகளும் இல்லை.. ஆஸ்பத்திரிகளுக்கு வெளியே உள்ள ரோட்டில் கொரோனோ நோயாளிகள் படுத்துக்கிடப்பது போன்ற போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை தந்தது.

பாதிப்பு
இப்போது நிலைமை என்னவென்றால், மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த மணி நேரத்தில் புதிதாக 37,236 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகாவில் 39,305 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... மகாராஷ்ராவையே பின்னுக்கு தள்ளிவிட்டது கர்நாடகம். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 39,305 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 596 பேர் இறந்து போயுள்ளனர்.. இப்படி இருந்தும் அந்த மாநில மக்களிடம் அலட்சியமே நீடிக்கிறது.
|
வீடியோ
ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.. அந்த குறிப்பிட்ட மெயின் ரோட்டில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.. ஆனால், ஒரு கடையின் ஷட்டரை மட்டும் ஒருவர் திறக்கிறார்.. அப்போது மூடப்பட்ட அந்த கடையில் இருந்து ஏராளமான பெண்களும், சில ஆண்களும் வேக வேகமாக வெளியே வருகிறார்கள்.. அது ஒரு சேலை கடை ஆகும்.. கடையை முன்பக்கம் ஷட்டரால் மூடிவிட்டு, உள்ளே திருட்டுத்தனமாக புடவை விற்பனை நடந்துள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications