மிரட்டல் மெயிலில் இருந்த அந்த வார்த்தை.. பெங்களூரில் பள்ளி, கோவில்களில் பாதுகாப்பை அதிகரிக்க ஆர்டர்
பெங்களூர்: பெங்களூரில் இன்று ஒரே நேரத்தில் 48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பெங்களூரில் பள்ளி, கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என போலீசாருக்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவுக்கு பின்னணியில் முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
பெங்களூரில் இன்று வழக்கம்போல் பள்ளிகள் இயங்கின. காலை முதல் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்றனர். இந்நிலையில் தான் திடீரென்று பெங்களூரில் உள்ள 15 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

பெங்களூர் பசவேஸ்வரா நகர்,, எலகங்கா உள்பட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு இன்று காலை 10.05 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு இந்த மிரட்டல் வந்தது.
இதையடுத்து பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பள்ளிகள் முன்பு மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் குவிந்தனர்.
போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிகளுக்கு சென்று அதிரடி வெடிகுண்டு இருக்கிறதா? என தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும் அது வெறும் புரளி என்பதும் தெரியவந்ததும். மேலும் Kharijites என்ற பெயரிலான இ-மெயில் முகவரியில் இருந்து இந்த வெடிகுண்டு மிரட்டல் 48 பள்ளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை யார் அனுப்பியது என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலால் பல பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டது. அதோடு பெங்களூர் முழுவதும் பரபரப்பான நிலையை எட்டியுள்ளது. இந்நிலையில் தான் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து கர்நாடகாவில் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் பெங்களூர் உள்பட மாநிலம் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை அதிகப்படுத்த முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து கர்நாடகா முதல்வரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
பெங்களூரில் தனியார் பள்ளிகளில் சட்டவிரோத செயல் (வெடிப்பொருளை வெடிக்க செய்வது) நடத்துவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிகளில் சோதனை நடத்தினர். பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயப்படும்படியான சூழல் எதுவும் இல்லை.
இந்த வழக்கை அரசு சாதாரணமாக எடுத்து கொள்ளவில்லை. மிக கம்பீரமாக எடுத்து கொள்கிறது. பள்ளி மற்றும் கோவில்களில் சரியான பாதுகாப்பு வழங்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுடன் பேசி அறிவுரை வழங்கி உள்ளேன். மாநிலத்தில் பாதுகாப்பான சூழல் நிம்மதியான வாழ்க்கையை அனைத்து மக்களுக்கும் உருவாக்குவது தான் அரசின் கடமையாக இருக்கிறது.
பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் எந்த செயலையும் அரசு வேடிக்கை பார்க்காது. இந்த மிரட்டல் செயலில் ஈடுபட்டவரை விரைந்து கண்டுபிடித்து தண்டனை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் சித்தராமையாவின் இந்த உத்தரவுக்கு பின்னணியில் உள்ள முக்கிய காரணம் வெளியாகி உள்ளது.
அதாவது பெங்களூரில் ஒரே நேரத்தில் 48 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது இதுதான் முதல் முறையாகும். அதோடு மிரட்டல் இ-மெயிலில் மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தாக்குதல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு உருவ வழிபாட்டை கைவிட்டு இஸ்லாம் மதத்துக்கு அனைவரும் மாற வேண்டும். இல்லாவிட்டால் அழிக்கப்படுவார்கள். அல்லாஹூ அக்பர்'' என்பன போன்ற வார்த்தைகள் இருந்தது. இதனால் தான் இந்த மிரட்டலை கர்நாடகா அரசு மிகவும் சீரியஸாக எடுத்து பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications