நிஜத்தில் ஒரு '96' பட சம்பவம்... 35 வருடக் காத்திருப்பு.. 65 வயதில் காதலியை கரம் பிடித்த காதலன்!!
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் குடும்பத்தினரின் எதிர்ப்பு காரணமாகச் சிறு வயதில் பிரிந்த காதலர்கள் சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருணம் செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
'காதல்-னா என்ன தெரியுமா என்ன தெரியுமா' என்று விளக்கும் வசனம் என்பது தமிழ் சினிமாவில் மிகவும் பழையது. ஆனால், காதல் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவத்தைத் தரும் என்பதே உண்மை.
அப்படி தான் கர்நாடகாவில் சுமார் 35 ஆண்டுகள் கழித்து காதலியை கரம் பிடித்துள்ளார் இந்த 65 வயது முதியவர். இது தான் இப்போது இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கர்நாடக காதலர்கள்
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள தேவாரமுத்தனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயம்மா - சிக்கண்ணா. இவர்கள் சிறுவயதிலேயே காதலித்துள்ளனர். ஒரே கிராமம் என்பதால் இருவரின் குடும்பத்தினருக்கும் இந்த காதல் குறித்துத் தெரிய வந்துள்ளது. இருப்பினும், கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்து வரும் சிக்கண்ணாவுக்கு தங்கள் மகளைத் திருமணம் செய்து கொடுக்க ஜெயம்மாவின் பெற்றோருக்கு விருப்பமில்லை.

பிரிந்து சென்ற சிக்கண்ணா
இதனால் அவர்கள் தங்கள் மகளை வேறுறொரு மாப்பிள்ளைக்குத் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். திருமணத்திற்குப் பிறகு ஜெயம்மா தனது கணவருடன் அதே கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார். இருப்பினும், தனது காதலி மற்றொருவருக்குத் திருமணம் ஆகியிருப்பது சிக்கண்ணாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து சிக்கண்ணா மைசூர் அருகே உள்ள மேட்டகல்லி என்ற கிராமத்திற்குச் சென்று, அங்குக் கூலி வேலை செய்யத் தொடங்கினார்,

திருமணம் செய்யவில்லை
இருப்பினும், ஜெயம்மா மீது கொண்ட தீராத காதலால் சிக்கண்ணா வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேட்டகல்லி கிராமத்திற்குச் சென்ற பிறகு ஜெயம்மாவை சிக்கண்ணா நேரில் சந்திக்கவில்லை என்றாலும் கூட, ஜெயம்மா நன்றாக இருக்கிறாரா என்பது குறித்த தகவல்களைத் தொடர்ந்து கேட்டுத் தெரிந்து கொண்டுள்ளார்.

திருமண வாழ்க்கை
திருமணம் ஆன சில ஆண்டுகளில் ஜெயம்மாவுக்கு மகன் பிறந்துள்ளார். இருப்பினும், குடும்பத்தில் பிரச்சினை தொடர்ந்து ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஜெயம்மாவையும் அவரது மகனையும் தனியாக விட்டுவிட்டு அவரது கணவர் சென்றுவிட்டார். இதன் பிறகு மைசூருக்கு வந்த ஜெயம்மா, கஷ்டப்பட்டு மகனை வளர்த்துள்ளார். 25 வயதாகும் ஜெயம்மாவின் மகன் தற்போது கர்நாடக மாநில போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார்.

65 வயதில் திருமணம்
இதற்கிடையே ஜெயம்மாவை அவரது கணவர் கைவிட்டது தொடர்பான தகவல் சிக்கண்ணாவுக்கு கிடைத்துள்ளது. இதையடுத்து ஜெயம்மாவை தொடர்பு கொண்ட அவர், மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர். அப்போது சிக்கண்ணா தனது காதலைத் தெரிவிக்க, அதை ஜெயம்மாவும் ஏற்றுக்கொண்டார். இதன் பிறகு சுமார் 35 ஆண்டுகள் கழித்து, தனது காதலியை கரம் பிடித்துள்ளார் இந்த 65 வயது முதியவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications