காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசுவதா.. டிரம்புக்கு கொஞ்சம் கூட ஞானமே இல்லை.. சித்தராமையா
பெங்களூர்: காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு போதிய ஞானம் இல்லை என சித்தராமையா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா நேற்று பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டு காந்தியின் படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது அந்த அலுவலகத்தில் உள்ள சுதந்திர பூங்காவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டனர்.

நிவாரணம்
அப்போது அங்கு சித்தராமையா கூறுகையில் மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து வீதிக்கு வந்துவிட்டனர். பலர் உயிரிழந்துள்ளனர். எனினும் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை.

குஜராத்
மாநிலத்தில் மழை, வெள்ளத்தை பார்வையிட பிரதமர் மோடி இதுவரை வரவில்லை. நமது மாநிலம் மட்டுமின்றி அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்கு கூட சென்று மழை பாதிப்புகளை பிரதமர் பார்வையிடவில்லை.

குஜராத்
மாநிலத்தில் மழை, வெள்ளத்தை பார்வையிட பிரதமர் மோடி இதுவரை வரவில்லை. நமது மாநிலம் மட்டுமின்றி அவரது சொந்த மாநிலமான குஜராத்துக்கு கூட சென்று மழை பாதிப்புகளை பிரதமர் பார்வையிடவில்லை.

கூட்டணி அரசு
ஆந்திரா, தெலுங்கானா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த மழை பாதிப்பை பார்வையிடவில்லை. ஆனால் பீகாரில் மட்டும் வேண்டிய உதவியை செய்வதாக அவர் தெரிவித்தார். ஏனென்றால் பீகாரில் பாஜக கூட்டணி அரசு ஆட்சி, அதனால் உதவுவதாக தெரிவித்தார்.

இந்தியாவின் தந்தை
மத்திய அரசு செத்து போய்விட்டது. உள்நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் வெளிநாட்டுக்கு செல்கிறார். ஐநா பொதுச் சபை கூட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை இந்தியாவின் தந்தை என கூறியுள்ளார்.

அதிபர்
மகாத்மா காந்தியை நாம் தேசப்பிதா என்கிறோம். ஆனால் டிரம்போ, காந்தியுடன் மோடியை ஒப்பிட்டு பேசியுள்ளார். இதன் மூலம் டிரம்புக்கு போதிய ஞானம் இல்லை என்றே தெரிகிறது. காந்தியடிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் டிரம்ப், அமெரிக்காவின் முன்னாள் அதிபராக இருந்த பராக் ஒபாமாவிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று சித்தராமையா தெரிவித்தார்.
-
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications