'சிங்கம்' வில்லன் டேனியின் கூட்டாளி நிஜத்தில் போதைப் பொருள் கடத்தல்-பெங்களூருவில் அதிரடி கைது!
பெங்களூரு: நடிகர் சூர்யாவின் சிங்கம் திரைப்படத்தில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் மன்னன் டேனியின் கூட்டாளியாக நடித்த நைஜீரிய நடிகர் மெல்வின் நிஜத்தில் போதைப் பொருள் கடத்தியதால் பெங்களூருவில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
சிங்கம்-2 திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகர் டேனி சபானி. இத்திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக டேனி என்ற பெயரில் நடித்திருந்தார்.
டேனியின் வலதுகரமாக சிங்கம்-2 திரைப்படத்தில் நடித்தவர் நைஜீரியாவைச் சேர்ந்த காக்விம் மெல்வின். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி சினிமாக்களில் போதைப் பொருள் கடத்தல் பாத்திரத்தில் அதிகமாக நடித்தவர் காக்விம் மெல்வின். தமிழில் விஸ்வரூபம், சிங்கம் 2 ஆகியவற்றில் நடித்திருக்கிறார் மெல்வின்.

பெங்களூருவில் சோதனை
மும்பையில் உள்ள நியூயார்க் பிலிம் அகாடாமியில் சினிமா குறித்து படிவர். தற்போது பெங்களூருவில் வசித்து வருகிறார். இந்த நிலையில்தான் பெங்களூருவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் தொடர்பாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெங்களூரு நகரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

சிக்கிய சிங்கம் நடிகர்
இந்த சோதனையின் போது காக்விம் மெல்வின் போதைப் பொருளுடன் போலீசில் சிக்கினார். அவரிடம் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப் பொருள், ஹாசிஸ் கஞ்சா எண்ணெய் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூ8 லட்சம். மேலும் ரூ5,000 ரொக்கம், செல்போன் ஆகியவற்றையும் மெல்வினிடம் இருந்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

சினிமா பிரபலங்களுக்கு தொடர்பா?
இதனையடுத்து காக்விம் மெல்வினிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். சினிமா பிரபலங்களுக்கு மெல்வின் போதைப் பொருட்களை சப்ளை செய்திருக்கிறாரா? என்கிற கோணத்திலும் போலீசார் விசாரிக்கின்றனர். மெல்வின் செல்போனில் பதிவான செல்போன் எண்கள், கால் ஹிஸ்டரி ஆகியவற்றையும் பெங்களூரு போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். இந்த விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் ஹெராயின் கடத்தல்
அண்மையில் குஜராத்தில் ரூ21,000 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதுவரை சென்னையை சேர்ந்த தம்பதியினர் உட்பட 8 பேர்தான் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஹெராயின் கடத்தல் கும்பலின் தலைவன் யார்? என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகாதது பெரும் சர்ச்சையாகவும் வெடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications