Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் காங்கிரசுக்கு தனிபெரும்பான்மை! பாஜக, ஜேடிஎஸ்க்கு பெரிய அடி! பரபர தேர்தல் கருத்து கணிப்பு

கர்நாடகா மாநிலத்தில் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியமைக்க 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்துக்கான சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சி தலைவர்கள் மாநிலம் முழுவதும் யாத்திரை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில் தற்போது புதிய கருத்து கணிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் எனவும், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் பெரிய அளவில் சரிவை சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 ல் தேர்தல் நடந்தது. ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது. இதனால் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் கர்நாடகாவில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது கர்நாடகாவுக்கு இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் விசிட் செய்துள்ளனர். இதனால் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி

பாஜக-காங்கிரஸ் இடையே கடும் போட்டி

இந்நிலையில் தான் கர்நாடகாவில் பல கட்சிகளை சேர்ந்தவர்கள் தற்போதே தேர்தல் பணியை தொடங்கி விட்டனர். வேட்பாளர்களை அறிவித்து பிரசாரத்தையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி பொறுத்தமட்டில் பாஜக, காங்கிரஸ் கட்சி இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார். மாறாக எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி மீண்டும் அரியணையில் ஏறும் நோக்கத்தில் களப்பணி ஆற்றி வருகிறது.

ஜேடிஎஸ்-ஆம்ஆத்மி ஆர்வம்

ஜேடிஎஸ்-ஆம்ஆத்மி ஆர்வம்

மேலும் இந்த 2 கட்சிகளுக்கும் சவால் அளிக்கவும், தங்களின் செல்வாக்கை நிரூபிக்கும் முனைப்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகனும், முன்னாள் முதல்வருமான குமாரசாமியின் ஜேடிஎஸ் கட்சியும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதுதவிர ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ், பாஜகவுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஆம்ஆத்மி கட்சியும் களமாட தயாராகி வருகிறது. கர்நாடகாவை பொறுத்தமட்டில் நேரடி போட்டி என்பது பாஜக, காங்கிரஸ் இடையே தான் என்றாலும் கூட இந்த கட்சிகளையும் புறம்தள்ளிவிட முடியாது. குறிப்பாக யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் கிங் மேக்கராக ஜேடிஎஸ் கட்சி தான் மாறும். இதனால் அந்த கட்சியும் கணிசமான இடங்களில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகிறது.

கருத்து கணிப்பு முடிவுகள்

கருத்து கணிப்பு முடிவுகள்

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியைமக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்பதால் தனிப்பெரும்பான்மையை பெற அனைத்து கட்சியினரும் வியூகம் வகுத்து செயல்பட்டு வருகின்றனர். இதற்கிடையே தான் தேர்தலுக்கு முந்தை கருத்து கணிப்புகளை பல அமைப்புகள் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த கருத்து கணிப்புகளின் முடிவுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இதில் பெரும்பாலான கருத்து கணிப்புகள் கர்நாடகாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கூறுகின்றன. மாறாக சில கருத்து கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவாகலாம் என தெரிவித்துள்ளன.

ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்

ஆட்சியை பிடிக்கும் காங்கிரஸ்


இந்நிலையில் தான் ஸ்மால் பாக்ஸ் இந்தியா (SMall Box India) எனும் அமைப்பின் சார்பில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வேயின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி கர்நாடகாவில் பாஜக ஆட்சியை இழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என அந்த சர்வே தெரிவித்துள்ளது. மேலும் ஜேடிஎஸ் கட்சிக்கு கடந்த முறையை விட குறைந்த இடங்களிலேயே வெற்றி கிடைக்கும் எனவும் அந்த சர்வே தெரிவித்துள்ளது.

காங்கிரசுக்கு பெரும்பான்மை

காங்கிரசுக்கு பெரும்பான்மை

இதுதொடர்பாக ஸ்மால் பாக்ஸ் இந்தியா அமைப்பின் கருத்து கணிப்பின்படி காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சி 118 முதல் 122 இடங்களில் வெற்றி பெறும் என கருத்து கணிப்பு முடிவில் ஸ்மால் பாக்ஸ் இந்தியா தெரிவித்துள்ளது. ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவை எனும் நிலையில் இந்த கருத்து கணிப்பு முடிவு பெரும்பான்மைவிட அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது.

 பாஜகவுக்கு எத்தனை இடம்?

பாஜகவுக்கு எத்தனை இடம்?

மாறாக தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக 82 முதல் 86 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் எனவும், ஜேடிஎஸ் கட்சி 18 முதல் 23 தொகுதிகளில் வாகை சூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர சுயேச்சைகள், பிற கட்சியை சேர்ந்தவர்கள் 2 முதல் 3 தொகுதிகளை கைப்பற்றலாம் என அந்த கருத்து கணிப்பின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

 உத்வேகத்தில் காங்கிரஸ்

உத்வேகத்தில் காங்கிரஸ்

முன்னதாக இந்த ஸ்மால் பாக்ஸ் இந்தியா அமைப்பு குஜராத்தில் பாஜகவும், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்து இருந்தது. அதேபோல் டெல்லி மாநகராட்சி தேர்தலில் பாஜக, காங்கிரஸை வீழ்த்தி ஆம்ஆத்மி வெற்றி பெறும் என கூறியிருந்தது. இந்த கருத்து கணிப்புகள் அனைத்தும் பலித்தன. இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான இந்த கருத்து கணிப்பு முடிவு கவனம் பெற்றுள்ளதோடு, காங்கிரஸ் கட்சியினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+