தென்னிந்தியாவின் மிக உயரமான மேம்பாலம்! கட்டுமானம் முடிந்தும் பயன்படுத்த முடியலயே! என்ன பிரச்சினை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் டிராபிக் சிக்கல் தவிர்க்கவே முடியாத ஒன்றாக மாறியுள்ள நிலையில், அங்கு மிகப் பெரிய மேம்பாலம் கட்டப்படும் அதைத் திறக்கவே முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கர்நாடக தலைநகர் பெங்களூரில் டிராபிக் என்பது ரொம்பவே முக்கிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. டிராபிக் அங்கு எந்தளவுக்கு மோசம் என்பதைக் காட்டும் வகையில் பல மீம்கள் இணையத்திலும் தெறிக்கவிடும்.

 South India’s tallest rail-road flyover in Bangalore is ready but still there is an issue

அந்தளவுக்கு டிராபிக் என்பது முக்கிய பிரச்சினையாக மாறியிருக்கிறது. இதற்கிடையே பெங்களூரில் டிராபிக் பிரச்சினையைச் சரி செய்யக் கர்நாடக அரசு, பெங்களூர் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

டிராபிக் பிரச்சினை: இதற்கிடையே கர்நாடக தலைநகர் பெங்களூரில் தென்னிந்தியாவின் மிக உயரமான மெட்ரோ + மேம்பாலம் அமைந்துள்ளது. இது ஜெயதேவா சந்திப்பில் உள்ள மாரேஹனஹள்ளி சாலையில் அமைந்துள்ளது. பெங்களூரில் டிராபிக் உச்சத்தில் இருக்கும் பகுதிகளில் ஒன்றான சென்ட்ரல் சில்க் போர்டு சந்திப்பில் டிராபிக்கை குறைக்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இப்போது இதைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்ககாலம்.

ராகிகுடா மற்றும் மத்திய பட்டு வாரியம் இடையே ஆர்.பி சாலை-பொம்மசந்திரா மெட்ரோ பாதை அமையும் இடத்தில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. பெங்களூர் மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்த மேம்பாலத்தைக் கட்டியது. இந்த இடத்தில் மேம்பாலம் மொத்தம் இரண்டு லெலவில் அமைய உள்ளது.

இரண்டு லெலவல்: முதல் லெவலில் நான்கு லேன் கொண்ட நெடுஞ்சாலை சாலை அமைகிறது. அதற்கு மேல் இரண்டாவது தளத்தில் மெட்ரோ தண்டவாளம் அமையவுள்ளது. இந்த மேம்பாலம் மொத்தம் 3.2 கிமீ நீளம் கொண்டதாக இருக்கும். இது நிலத்தில் இருந்து சுமார் 3.1 மீட்டர் உயரத்தில் அமைய உள்ளது. இதன் மூலம் தென்னிந்தியாவின் உயரமான மேம்பாலம் என்ற சிறப்பை இது பெறுகிறது. இந்த மேம்பாலம் ரெடியாகிவிட்ட போதிலும் இதைப் பயன்படுத்த முடியாத சூழல் இருக்கிறது.

ஏனென்றால் மேம்பாலத்தையும் சாலையும் இணைக்கும் ரேம்ப்பின் கட்டுமானம் இன்னும் முடியவில்லை. இதன் காரணமாக மேம்பால பணிகள் முடிந்த போதிலும், அதைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முன்பு இந்த ரேம்ப் பணிகளைத் தனியார் ஒப்பந்ததார் ஒருவர் மேற்கொள்ள இருந்தார். இருப்பினும், அவர் பாதியிலேயே இந்த வேலையைக் கைவிட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இதையடுத்து புதிதாக டெண்டர் கோரப்பட்டு, புதிய நிறுவனத்திற்கு இந்த டெண்டர் ஒதுக்கப்பட்டுள்ளது.

என்ன பிரச்சினை: டெண்டர் தாமதமாக ஒதுக்கப்பட்டதால் இந்த ரேம்ப் அமைக்கும் பணிகள் நிறைவடையவும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி இந்த பணிகளை முடிக்கவே வரும் டிச. மாதம் ஆகும் என்று கூறப்படுகிறது. இதனால் மேம்பாலத்தை அமைக்கும் பணி முழுமையாக முடிந்த போதிலும் ரேம்ப் பணிகள் நிறைவடையாததால் இதைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பெங்களூர் போலீசார் கூறுகையில், "இந்த மேம்பாலத்தின் எஞ்சிய பணிகளை விரைவில் முடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். இந்த மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால் பெரியளவில் பயன் தரும். பிடிஎம் லேஅவுட்டில் இருந்து அவுட்டர் ரிங் சாலையை நோக்கிச் செல்லும் இந்த மேம்பாலத்தை ஐடி ஊழியர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள்.

எனவே, இந்த மேம்பாலம் அவர்களுக்குப் பெரியளவில் உதவும்.. எலக்டிரானிக் சிட்டி, ஓசூர் செல்லும் வாகனங்களுக்கும் இது உதவும். மேலும், இங்கு இருக்கும் சிக்னலும் 4இல் இருந்து இரண்டாகக் குறைக்கப்படும்" என்றார். இந்த மேம்பாலப் பணிகள் முழுமையாக முடிந்து இது பண்பாட்டிற்கு வந்தால் இங்கு டிராபிக் மிகப் பெரியளவில் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+