பெங்களூர் புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் 3 ஆயிரம் பேருக்கு தலா 100 டிஸ்கவுண்ட் கூப்பன்
பெங்களூர்: பெங்களூரில் மூன்றாம் தமிழ்ப் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புத்தக கூப்பன்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகின்றன. எல்கேஜியோ, எம்பிபிஎஸ்சோ எந்த மாணவராக இருந்தாலும் இந்த புத்தக கூப்பன்களை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு கூப்பனும் 100 ரூபாய் மதிப்பு கொண்டது. எனவே வாங்கும் புத்தகத்தில் ஒரு கூப்பனுக்கு ரூ.100 தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை புத்தக விலையே ரூ.100க்கு உள்ளே என்றால் புத்தகத்தை நீங்கள் இலவசமாக எடுத்துச் செல்லலாம் என்பதுதான் இந்த கூப்பனின் அர்த்தமாகும்.
மொத்தம் ரூ.3 ஆயிரம் கூப்பன்கள் இதுபோல தரப்பட்டுள்ளன. ஆக மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்புள்ள கூப்பன்களை பெங்களூர் நகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்றல் வாரிய சேர்மேன் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் தனது சொந்தப் பணத்தில் இருந்து வழங்கியுள்ளார்.

இந்த கூப்பன் சீட்டுகளில், "புத்தகத்தை வாசியுங்கள்! உங்கள் வெற்றிக்கு வழிகாட்ட சகோதரனாக காத்திருக்கிறேன்" என்ற வாசகம் ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ் படத்துடன் இடம்பெற்றுள்ளது. அதிகாரியை தொடர்புகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்திற்கு இத்தனை மாணவர்கள்தான் என்ற கணக்கெல்லாம் கிடையாது. எத்தனை மாணவர்கள் வந்தாலும் கணக்கு வழக்கு இல்லாமல் கூப்பன்கள் தரப்படுகின்றன. ஒரே நோக்கம், மாணவர்கள் புத்தகங்கள் வாசிக்க வேண்டும் என்பதுதான். தமிழ், ஆங்கிலம், கன்னடம் மொழிகளில் புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன. குயின்ஸ் சாலையிலுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் பில்டிங்கிற்கு எதிரேயுள்ள The Institution of Engineers கட்டிட வளாகத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பார்க்கிங் வசதியும் அங்கு உள்ளன.
பெங்களூரில் நடைபெற்று வரும் 3ஆம் தமிழ்ப் புத்தகத் திருவிழாவின் இன்றைய, 6ஆம் நாள் நிகழ்ச்சிகள் இதோ:
- மாலை 3:30 மணிக்கு: தமிழர் தற்காப்புக் கலையான சிலம்பாட்டம் நிகழ்ச்சி.
- மாலை 4:30 மணிக்கு: மூத்த பத்திரிக்கையாளர் இரா. குமார் எழுதிய "கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின்" ஆகியோர் பற்றிய நூல் வெளியீட்டு விழா.
- சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி.
- ஆய்வுரை: திரு சு குமணராசன், மும்பை.
- மாலை 6:00 மணிக்கு: பட்டிமன்றம்.
- தலைப்பு: "மகிழ்வும் நிறைவும் மணவாழ்வுக்கு முன்பே பின்பே".
- தலைவர்: கவியருவி அப்துல் காதர்.
-
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்.. 22 வயது காதலிக்கு, காதலன் கொடுத்த கொடூர தண்டனை.. உயிரே போச்சே -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ்












Click it and Unblock the Notifications