பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னங்க இது.. நம்ம சுதாகரனா இவர்.. இப்படி அடையாளமே தெரியாத அளவுக்கு மெலிஞ்சுட்டாரே!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த வி.என்.சுதாகரன் அடையாளமே தெரியாத அளவுக்கு உடல் மெலிந்துவிட்டார். இதை பார்த்த அவரது குடும்பத்தினர் கலங்கிய சம்பவம் நடந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, வி.என். சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் தலா ரூ 10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஒரு வேளை அபராதத் தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் தீர்ப்பு.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது இவர்கள் எல்லாம் சேர்ந்து சிறைக்கு சென்று நாட்களை கழித்து, சசிகலா பரோலில் வந்த நாட்களை கழித்து கடந்த ஜனவரி மாதம் இவர்களுக்கு விடுதலை என அறிவிக்கப்பட்டது.

காதலுக்கு அடிமையான மாப்பிள்ளை தான் வேண்டும்..அக்ஷராவின் திருமண ஆசை..அலைமோதும் ரசிகர்கள் காதலுக்கு அடிமையான மாப்பிள்ளை தான் வேண்டும்..அக்ஷராவின் திருமண ஆசை..அலைமோதும் ரசிகர்கள்

அபராதத் தொகை

அபராதத் தொகை

இதையடுத்து சசிகலா உள்ளிட்டோர் அபராதத் தொகையை செலுத்தினால் ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவர் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் சசிகலாவும் இளவரசியும் தலா ரூ 10 கோடி அபராதத் தொகையை செலுத்தினர். இதையடுத்து அவர்கள் விடுதலையாகும் நேரத்தில் சசிகலாவுக்கு கொரோனா பரவல் ஏற்பட்டது.

அபராதம்

அபராதம்

அவர் பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மருத்துவமனையிலிருந்தபடியே சிறையிலிருந்து விடுதலையானார். ஆனால் சுதாகரனால் அபராதத் தொகையை செலுத்த முடியவில்லை.

பெங்களூர் குடும்பத்தினர்

பெங்களூர் குடும்பத்தினர்

இதையடுத்து அவர் நீதிமன்ற உத்தரவுபடி மேலும் ஓராண்டு சிறை தண்டனையை அனுபவித்தார். ஏற்கெனவே அவர் பெற்ற தண்டனை காலத்தை கணக்கில் கொண்டு ஓராண்டு ஆவதற்கு முன்பே அவர் இன்றைய தினம் விடுதலை செய்யப்பட்டார். இதற்காக பெங்களூரில் அவரது குடும்பத்தினர் முகாமிட்டிருந்தனர்.

சுதாகரனின் வழக்கறிஞர்

சுதாகரனின் வழக்கறிஞர்


சுதாகரனின் வழக்கறிஞர் உள்ளே சென்று சிறை நடைமுறைகளை முடித்துவிட்டு சுதாகரனை வெளியே அழைத்து வந்தார். அப்போது அவர் பார்ப்பதற்கு உடல் மெலிந்து காணப்பட்டார். இதை கண்ட அவரது குடும்பத்தினர் கண் கலங்கினர். இந்த நெகிழ்ச்சி சம்பவம் சிறைச் சாலை வாயிலில் நடைபெற்றது.

English summary
V.N. Sudhakaran released from Bengaluru prison with a lean appearance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X