"ஆணுறை".. லைட்டரும், ஒயிட்னரும்.. இப்படி எங்காச்சும் நடக்குமா.. அதிகாரிகளை மிரள வைத்தது யார் பாருங்க
பள்ளி மாணவர்களின் பையில் ஆணுறை, சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன
பெங்களூரு: இளைய சமுதாயம் எங்கே பயணித்து கொண்டிருக்கிறது என்றே தெரியவில்லை.. அதைவிட, சில பள்ளி மாணவர்களின் போக்கின் அபாயம், மிகுந்த அதிர்ச்சியையும், கவலையையும் உண்டுபண்ணி வருகிறது.. அப்படித்தான் பெங்களூர் பள்ளியிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இது பெற்றோர்களையும், பொதுமக்களையும் கலங்கடித்து வருகிறது.
நம் தமிழகத்தின் பள்ளிகளில் செல்போன்களை மாணவர்கள் கொண்டுவரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.. எனினும் சில மாதங்களுக்கு காரைக்குடியில், ஒரு பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தது.
வகுப்பு நேரத்தில், கிளாஸ்ரூமிலேயே செல்போனை வைத்து ஒரு மாணவன் விளையாடி உள்ளான். இதை அந்த ஆசிரியர் கண்டித்ததால், ஆத்திரமடைந்த மாணவன், ஆசிரியரையே கத்தியால் குத்தி கைதாகிய சம்பவமும் நடக்கத்தான் செய்தது..

மகேஷ் வார்னிங்
ஒருசில இடங்களில் இப்படி நிகழ்ந்தாலும், தமிழகம் முழுவதும் 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்கள், பள்ளிக்கு செல்போன் எடுத்துவந்தால் அவை பறிமுதல் செய்யப்படும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்படமாட்டாது என்று நம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வார்னிங் தந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. இந்நிலையில், பெங்களூரு பள்ளி ஒன்றில், மாணவர்களிடம் திடீரென நடத்தப்பட்ட சோதனையில் போதை பொருட்கள் உட்பட சில பொருட்கள் சிக்கி உள்ளன.

லைட்டர்கள்
கர்நாடக மாநிலத்திலும், சில பள்ளிகளில் வகுப்பறைகளுக்கு மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதாக புகார் எழுந்தது.. இந்த புகாரையடுத்து, மாணவர்களின் பைகளை சோதனை செய்ய தொடங்கினர்... அந்தவகையில், அங்கு செயல்பட்டு வரும் கேஏஎம்எஸ் பள்ளியிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.. அப்படி சோதனை நடத்தியபோது, செல்போன்கள் தவிர, அந்த மாணவர்களின் பைகளில் ஆணுறைகள் இருந்திருக்கின்றன.. அதுமட்டுமல்ல, அந்த பைகளில் வாய்வழி கருத்தடை சாதனங்கள், சிகரெட் லைட்டர்கள், சிகரெட்டுகள், ஒயிட்னர்கள், ஏகப்பட்ட பணம் போன்றவைகள் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஒயிட்னர்கள்
இவ்வளவும், 8, 9 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்ததை கண்டு அதற்கு மேல் அதிர்ந்து போய்விட்டனர்... இதுகுறித்து பெற்றோர்-ஆசிரியர்கள் சந்திப்பு நடைபெற்றது.. அப்போது, நடந்த சம்பவத்தையெல்லாம் கேட்டு பெற்றோர்களே அதிர்ந்தனர்.. குழந்தைகளின் திடீர் நடத்தை மாற்றங்கள் குறித்தும் பெற்றோர்கள் அந்த கூட்டத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.. சம்பந்தப்பட்ட மாணவர்களை பள்ளியில் இருந்து டிஸ்மிஸ் அல்லது சஸ்பெண்ட் செய்வதற்கு பதிலாக, அந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க பெற்றோர்களிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கருத்தடை மருந்து
பள்ளிகளிலும் இதுகுறித்து கவுன்சிலிங் தருவதாகவும் சொல்லி உள்ளனர்.. ஒரு பள்ளி முதல்வர் இதுகுறித்து கூறும்போது, 10ம் வகுப்பு சிறுமியின் பையில் ஆணுறை இருந்திருக்கிறது.. இதை அவளுடன் படிக்கும் சக தோழிகளும், அந்த மாணவியின் டியூஷன் நண்பர்களும் பார்த்தார்களாம்.. கேஎம்எஸ் பொதுச்செயலாளர் சஷி குமார், பள்ளியில் நடத்தப்பட்ட சோதனை பற்றி சொல்லும்போது, "ஒரு மாணவியின் பையில், வாய்வழி கருத்தடை மருந்துகள் (ஐ-பில்) இருந்தன... தண்ணீர் பாட்டில்களில் மது கலந்து இருந்தது...

தண்ணீர் + மது
இந்த மாணவர்கள், தங்களின் ஆசிரியர்கள், நண்பர்களை கேவலமாக பேசியுள்ளதும், அவர்களை பார்த்து மோசமான சைகைகள் காட்டி வந்துள்ளதும், இப்படி செய்தது 5ம் வகுப்பு குழந்தைகள் ஆவர் என்றும் அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு கர்நாடகமே அதிர்ந்து போயுள்ளது.. மாணவர்களுக்கு கவுன்சிலிங் தந்து, அவர்களை நல்வழிப்படுத்தும் முயற்சியில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களும், பெற்றோர்களும் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
-
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications