‛ஒன்னும் தெரியல’.. அண்ணாமலை எப்படி தேர்தல் இணை பொறுப்பாளரானார்? ஜெகதீஷ் ஷெட்டருக்கு வந்ததே கோபம்
பெங்களூர்: கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளரான அண்ணாமலைக்கு ஒன்றுமே தெரியவில்லை. நாங்கள் அமைச்சர்களாக இருந்தபோது எங்களின் கைகளுக்கு கீழ் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் இப்போது தேர்தல் இணை பொறுப்பாளராக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் என்ன லாபி உள்ளது? என கேள்வி எழுப்பிய ஜெகதீஷ் ஷெட்டர் அவரை கடுமையாக சாடியுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக அன்றைய தினம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட உள்ளன.

இந்நிலையில் தான் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் குஜராத் மாடலில் சீனியர்கள், சிட்டிங் எம்எல்ஏக்கள் ஓரம்கட்டப்பட்டுள்ளதோடு, அதிகளவில் புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனால் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் இந்த தொகுதியில் கடந்த 2008, 2013, 2018 சட்டசபை தொகுதிகளில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தாலும் கூட இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தான் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக நியூஸ் ஒன் கன்னடா என்ற சேனலில் ஜெகதீஷ் ஷெட்டர் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு கட்சி தலைவர்களை அவர் விமர்சனம் செய்துள்ளார். குறிப்பாக தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளருமான அண்ணாமலையை கடுமையாக சாடியுள்ளார். இதுபற்றி ஜெகதீஷ் ஷெட்டர் கூறியுள்ளதாவது:
கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. இவர் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊரான தமிழ்நாடு சென்றார். அங்கு அவர் பாஜகவில் இணைந்தார். உடனடியாக தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டார். தமிழ்நாடு தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. 20க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்றார்களா? என்றால் இல்லவே இல்லை. வெறும் 5 முதல் 6 சீட்டு மட்டுமே வந்தது(உண்மையில் தமிழ்நாட்டில் பாஜக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 4).
ஆனால் கர்நாடகாவில் பாஜகவில் 6 முறை, 7 முறை என வெற்றி பெற்று எம்எல்ஏவான நிறைய பேர் உள்ளோம். ஆனால் ஒருமுறை கூட தேர்தலில் வெற்றி பெறாத அண்ணாமலை தான் நம் மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோர் கமிட்டியில் கூட்டத்தில் அவருடன் இருந்தோம். அவருக்கு ஒரு தொகுதி பற்றியும் தெரியவில்லை. இப்படியான ஒருவரை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமித்து என்ன செய்வது?. இதன் பின்னணியில் உள்ள அரசியல் லாபி என்ன?.
அண்ணாமலை ஒரு தேர்தல் இணை பொறுப்பாளர். அவர் முன்பு முன்னாள் முதல்வர்களான நானும், சதானந்த கவுடாவும் பின்வரிசையில் இருந்தோம். முன்வரிசையில் அண்ணாமலை இருந்தார். முன்னதாக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்தபோது அமைச்சர்களாக இருந்த எங்களின் கைகளுக்கு கீழ் ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் பாஜகவில் இணைந்தால் அவர்களுக்கு முன்பு சிறுவர்கள் போல் இருக்க வேண்டியதாக உள்ளது. இதனை ஒவ்வொரு கட்டத்திலும் நாங்கள் அனுபவித்து வந்துள்ளோம்.

மேலும் ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒருமுறை மாநில செயற்குழு கூட்டம் நடக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த கூட்டத்தில் எனக்கு 5 நிமிடம் கூட பேச வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதையெல்லாம் கட்சியின் நலன் கருதி நான் சகித்து கொண்டே வந்தேன். ஆனால் இப்போது சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நான் கட்சியில் இருந்து விலகி உள்ளேன்'' என்றார்.
*******
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications