Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலில் தோற்றவனா நான்? விமர்சித்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு, அண்ணாமலை பதிலடி.. என்ன சொன்னார்? ஆஹா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். இந்நிலையில் அவர் பாஜக தலைவர்களை விமர்சனம் செய்து வரும் நிலையில் தமிழக பாஜக தலைவரும், கர்நாடகா பாஜக தேர்தல் இணை பொறுப்பாளரான அண்ணாமலையையும் கடுமையாக விமர்சனம் செய்தார். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அண்ணாமலையை தோற்றதாக அவர் சாடிய நிலையில் தற்போது அதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக அன்றைய தினம் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் ஓட்டுகள் மே மாதம் 13ம் தேதி எண்ணப்பட உள்ளன. கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஏராளமான கட்சிகள் போட்டியிடுகின்றன.

 Tamil Nadu BJP president annamlai reply to Jagadish shettar who joins congress after quitting saffron party

குறிப்பாக ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் ஆம்ஆத்மி சார்பில் கடும் போட்டி நிலவுகிறது. வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதேபோல் காங்கிரஸ் கட்சியும் இழந்த ஆட்சியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கிடையே தான் பாஜகவில் வெற்றி வாய்ப்பு குறைவான சிட்டிங் எம்எல்ஏக்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கட்சியில் இருந்து ஓரம்கட்டப்பட்டுள்ளனர். அதன்படி தற்போது தேர்தலில் சுமார் 70க்கும் அதிகமான புதுமுகங்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர்கள், அமைச்சர்கள், சிட்டிங் எம்எல்ஏக்கள் என ஏராளமானவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

தார்வாட் மாவட்டம் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் உப்பள்ளி-தார்வாட் (சென்ட்ரல்) தொகுதியில் போட்டியிட ஜெகதீஷ் ஷெட்டருக்கு சீட் வழங்கப்பட்டது.இந்நிலையில் தான் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவினர் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

இதுதொடர்பாக நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‛‛பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் தான் எனக்கு சீட் வழங்க முட்டுக்கட்டை போட்டுள்ளார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் அண்ணாமலை. இவர் விஆர்எஸ் வாங்கி பாஜகவில் இணைந்து தமிழ்நாடு தலைவராகி உள்ளார். தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் அவரும், பாஜகவும் தோல்வியடைந்தது. கர்நாடகாவில் பாஜகவில் 6 முறை, 7 முறை என வெற்றி பெற்று எம்எல்ஏவான நிறைய பேர் உள்ளோம். ஆனால் ஒருமுறை கூட தேர்தலில் வெற்றி பெறாத அண்ணாமலை தான் நம் மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஒரு தொகுதி பற்றியும் தெரியவில்லை. இப்படியான ஒருவரை தேர்தல் இணை பொறுப்பாளராக நியமித்து என்ன செய்வது?. இதன் பின்னணியில் உள்ள அரசியல் லாபி என்ன?. அண்ணாமலை முன்வரிசையில் அமர முன்னாள் முதல்வர்களான நானும் சதானந்த கவுடாவும் பின்வரிசையில் இருந்தோம். அமைச்சர்களாக இருந்தபோது எங்களின் கைகளுக்கு கீழ் ஐபிஎஸ் அதிகாரிகளாக பணியாற்றியவர்கள் பாஜகவில் இணைந்தால் அவர்களுக்கு முன்பு சிறுவர்கள் போல் இருக்க வேண்டியதாக உள்ளது'' என சாடினார்.

இந்நிலையில் தான் ஜெகதீஷ் ஷெட்டர், தமிழ்நாடு பாஜக தலைவரும், கர்நாடகா மாநில பாஜக தேர்தல் இணை பொறுப்பாளரான அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவுடன் தேர்தல் தொடர்பான கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றார். அந்த கூட்டத்தின்போது அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் ஜெகதீஷ் ஷெட்டர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அண்ணாமலை கூறியதாவது:

‛‛மாநிலத்தில் கட்சியை வளர்த்த முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பெரிய தலைவர். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. இதில் எனக்கு மாற்றுக்கருத்து எதுவும் இல்லை. தற்போது அவர் எடுத்து இருக்கும் முடிவுக்கு மக்களே தீர்ப்பு வழங்குவார்கள். பாஜகவில் ஒரு தரப்புக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும். இன்னொரு தரப்பினருக்கு கட்சி பணி வழங்கப்படும். அந்த வகையில் தான் கர்நாடகா தேர்தலிலும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பாஜகவில் இருந்து ஜெகதீஷ் ஷெட்டர் விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். அவருக்கு மக்கள் பதில் அளிப்பார்கள்'' என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+