தமிழக காங்கிரஸ் தலைவராகும் கார்த்தி ப சிதம்பரம்? டிகே சிவக்குமாருடன் பரபர சந்திப்பு.. என்ன காரணம்?
பெங்களூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி மீது கார்த்தி ப சிதம்பரம் கண்வைத்துள்ளார். இந்நிலையில் தான் அவர் கர்நாடகா துணை முதல்வரும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டிகே சிவக்குமாரை திடீரென்று சந்தித்து பரபரப்பாக ஆலோசனை நடத்தி உள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கேஎஸ் அழகிரி உள்ளார். இந்நிலையில் தான் கேஎஸ் அழகிரி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட உள்ளார். மிசோராம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, உள்ளிட்ட 5 மாநில தேர்தல் காரணமாக தான் கேஎஸ் அழகிரி இன்னும் மாற்றப்படவில்லை.

இந்த தேர்தல் நவம்பர் 30ம் தேதியுடன் முடிய உள்ளது. அதன்பிறகு 5 மாநில தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3ம் தேதி வெளியாக உள்ளது. இந்த தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து கேஎஸ் அழகிரி மாற்றப்பட உள்ளார்.
இந்நிலையில் தான் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை பெற கார்த்தி ப சிதம்பரம் விரும்புகிறார். முன்னாள் மத்திய நிதி அமைச்சரான ப சிதம்பரத்தின் மகனான இவர் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ளார். இந்நிலையில் தான் கார்த்தி ப சிதம்பரம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி கிடைத்தால் திறமையாக நிர்வகிப்பதாக அவர் வெளிப்படுத்தி உள்ளார்.
இதற்கிடையே தான் திடீரென்று கார்த்தி ப சிதம்பரம், கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவரும், அந்த மாநில துணை முதல்வருமான டிகே சிவக்குமாரை சந்தித்துள்ளார். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவியை பெறும் விஷயத்தில் டிகே சிவக்குமாரிடம் ஆதரவு கோரியுள்ளதாக கூறப்படுகிறது. தென்இந்தியாவை பொறுத்தமட்டில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கனா உள்ளிட்ட மாநில காங்கிரஸ் தலைவர்களில் பலமான தலைவராக டிகே சிவக்குமார் உள்ளார்.
இதற்கு முன்பு குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜகவினர் இழுக்க முயன்றனர். அப்போது டிகே சிவக்குமார் அவர்களை தனது சொந்த மாவட்டமான ராமநகர் மாவட்டத்துக்கு அழைத்து வந்து தனியார் தங்கும் விடுதியில் தங்க வைத்து பாஜகவுக்கு பெரும் சவால் அளித்தார். இதன்மூலம் டிகே சிவக்குமார் இந்தியா முழுவதும் அவர் பிரபலமான தலைவரானார். மேலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கேவின் குட்புக்கில் இவர் உள்ளார்.
அதோடு சமீபத்தில் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.மாநில தலைவர் என்ற முறையில் டிகே சிவக்குமார் இந்த தேர்தலை சிறப்பாக கையாண்டு பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சியை அரியணை ஏற வைத்தார். அதன்பிறகு முதல்வர் பதவியை அவர் எதிர்பார்த்த நிலையில் மூத்த தலைவர் என்ற முறையில் சித்தராமையாவுக்கு வழங்கப்பட்டது.
அதாவது டிகே சிவக்குமார் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளிட்ட சில வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. இதனால் அவரை முதல்வராக்கினால் மத்திய விசாரணை அமைப்பு மீது அவர் மீது நடவடிக்கை மத்திய பாஜக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்பதால் தான் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி என்பது வழங்கப்பட்டது. இதனால் தான் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை பெற டிகே சிவக்குமாரின் ஆதரவு இருந்தால் அது இன்னும் எளிமையாகும் என நினைத்து கார்த்தி ப சிதம்பரம் அவரை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
-
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்!












Click it and Unblock the Notifications