பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேஜிஎப்பில் தமிழ் பெயர் பலகைகள் தார்பூசி அழிப்பு.. வட்டாள் நாகராஜ் அட்டூழியம்.. வைரலாகும் வீடியோ

Google Oneindia Tamil News

பெங்களூரு : கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலை கேஜிஎப் என்று அழைப்பார்கள். இங்கு பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ் பெயர் பலகைகளை தார் பூசி அழித்த வட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ் பெயர் அழிக்கப்பட்டதற்கு அங்கு தமிழர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    தமிழில் எதுவும் இருக்க கூடாது! Vattal Nagaraj போராட்டம் |KGF|Oneindia Tamil

    கேஜிஎப் அன்று அழைக்கப்படும் கர்நாடக மாநிலம் கோலார் தங்கவயலில் கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கு அதிகமானோர் தமிழர்கள் ஆவர்.

    சென்னையில் பகீர்.. சொகுசு காரில் இருந்த ரூ.1 கோடி போதைப்பொருள்.. 4 பேரை தூக்கிய போலீசார்! சென்னையில் பகீர்.. சொகுசு காரில் இருந்த ரூ.1 கோடி போதைப்பொருள்.. 4 பேரை தூக்கிய போலீசார்!

    மாநில பிரிப்பின் போது கர்நாடகா வசம் சென்றது. கிட்டத்தட்ட மும்பையின் தாராவி போல் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாக கோலார் காணப்படுகிறது.

    தமிழ் பெயர்கள்

    தமிழ் பெயர்கள்

    இந்நிலையில், கன்னட சலுவளி வாட்டாள் கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கடந்த மாதம், கோலார் தங்கவயலில் உள்ள தமிழ்ப் பெயர்ப் பலகைகளை அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோலார் மாவட்ட மற்றும் தங்கவயல் நகராட்சி நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதி வந்துள்ளார்.

    தமிழ் பெயர்கள்

    தமிழ் பெயர்கள்

    ஆனால் அப்படி எல்லாம் செய்ய முடியாது என்று மாவட்ட நிர்வாகம் மறுத்துவிட்டது. ஏனெனில் மாநில மொழியான கன்னடத்திலும், இரண்டாவது மொழியாக ஆங்கிலத்திலும் பெயர் பலகை இருந்துள்ளது. மூன்றாவது மொழியாக தமிழில் பெயர் பலகை இருந்துள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம் கோரிக்கையை ஏற்கவில்லை.

    தமிழ் பெயர் அழிப்பு

    தமிழ் பெயர் அழிப்பு

    இதனால் கோபம் அடைந்த வட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட சலுவளி, கன்னட அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கோலார் தங்க வயலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாட்டாள் நாகராஜ் கூறியபடி, கன்னட அமைப்பினர், 'தேசியக்கவி டாக்டர் குவெம்பு பேருந்து நிலையம்' என தமிழில் எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் மீது கருப்பு மை பூசி அழித்தனர்.

    கன்னட அமைப்பினர் கைது

    கன்னட அமைப்பினர் கைது

    இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த , தலித் ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் கலை அன்பரசன் தலைமையில் திரண்ட தமிழ் அமைப்பினர் கன்னட அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய வாட்டாள் நாகராஜை குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

    English summary
    Vattal Nagaraj president of the Kannada Chaluvali Vatal Paksha arrested by karnataka police overTamil name plates in KGP destroyed.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X