ஓடும் காரில் மாலை மாற்றிய ஜோடி.. காதலனா, பெற்றோரா.. யாருடன் செல்வது? ட்விஸ்ட் கொடுத்த புதுப்பெண்
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் பல்லாரியில் இருவேறு சமுகத்தைச் சேர்ந்த காதல் ஜோடி ஓடும் காரில் மாலை மாற்றிக் கொண்டனர். காரை விட்டு இறங்கிய உடன் பெற்றோருடன் செல்வதா, கணவனுடன் செல்வதா என்று குழம்பிய பெண், கடைசியில் காப்பகத்திற்கு போனார்.
கர்நாடக மாநிலம் பல்லாரி தாலுகா தேக்கலகோட்டை பகுதியை சேர்ந்த 24 வயதாகும் சிவபிரசாத், கொப்பலை சேர்ந்த அம்ருதா என்பவரை காதலித்து வந்துள்ளார். அவர்கள் 2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவார். இந்த காதல் விவகாரம் இருவீட்டாருக்கும் ஒரு கட்டத்தில் தெரியவந்தது.

இதனால் அந்த காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனாலும் இந்த ஜோடி தொடர்ந்து தங்கள் காதலை வளர்த்து வந்துள்ளார்கள். இந்நிலையில் பெற்றோர் எதிர்ப்பின் காரணமாக இரண்டு பேரும் வீட்டைவிட்டு ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
அதன்படி இரண்டு பேரும் வீட்டை விட்டு அண்மையில் வெளியேறினர். இந்த நிலையில் காரில் சென்ற அவர்கள் 2 பேரும், நண்பர்கள் முன்னிலையில் திடீரென மாலை மாற்றிக் கொண்டனர். ஆனால் திருமணம் செய்யவில்லை. காதல் ஜோடி மாலையும் கழுத்துமாக காரை விட்டு இறங்கிய உடன், இதுபற்றிய தகவல் அறிந்து இருவீட்டாரும் மோதலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினார்கள்.
இதனிடையே அம்ருதாவின் பெற்றோர் அவரை அழைத்து செல்ல முயன்றார்கள் . ஆனால் பெற்றோருடன் செல்ல அம்ருதா மறுத்துவிட்டார். தனது கணவருடன் தான் இருக்க போவதாக கூறியிருக்கிறார். அப்போது அம்ருதாவிடம் அவரது பெற்றோர் தங்களை பற்றி கொஞ்சமாவது நினைத்து பார்க்கும்படி கெஞ்சினார்கள்.
இதனால் மனம் மாறிய அம்ருதா, பெற்றோருடன் செல்லவதாக முடிவு செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிவபிரசாத், தன்னுடன் இருக்கும்படி அம்ருதாவை கெஞ்சினார். இதன்காரணமாக அம்ருதா, பெற்றோருடன் செல்வதா அல்லது காதலனுடன் செல்வதா என குழப்பத்தில் மூழ்கினார். காதலனுடன் போனால் அம்மா அழுகிறார்.. அம்மா உடன் போனால் காதலன் அழுகிறான் என்ன செய்வது என்று யோசித்தவர், முடிவெடுக்க முடியாமல் தடுமாறினார்.
இதைக்கண்ட போலீசார் அம்ருதாவை பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அம்ருதாவை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி சிவபிரசாத் கேட்டுள்ளார். ஆனால், அவர்களுக்கு திருமணம் ஆகாததால், போலீசார் அவருடன் அம்ருதாவை அனுப்ப மறுத்துவிட்டார்கள். இதனால் அவரது காதலன் சிவபிரசாத் காப்பகத்துக்கு வெளியே கண்ணீருடன் தவித்து வருகிறார்.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications