தேர்தலில் ஒருமுறை கூட தோற்காத அனந்த்குமார்.. புற்றுநோயிடம் தோற்ற சோகம்.. பாஜகவின் மகுடம் இவர்!
Recommended Video

பெங்களுர்: பாஜக கட்சியின் மிக முக்கியமான தலைவர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் அனந்த்குமார் நேற்று நள்ளிரவில் காலமானார்.
கர்நாடக மாநிலம் மைசூரில் 1959 ஜூலை 22ல் பிறந்தவர் அனந்தகுமார். மத்திய அரசின் ரசாயனம் மற்றும் உரம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்தவர் அனந்தகுமார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மூலம் பாஜகவில் இணைந்தார். பாஜக கட்சியை சேர்ந்த இவர் முதல்முறை 1996ல் இருந்து பெங்களூர் தெற்கு லோக் சபா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றவர். அவருக்கு மிகவும் ராசியான பெங்களூர் தெற்கு தொகுதியில் இருந்துதான் அதன்பின் வரிசையாக லோக் சபா தேர்தலில் போட்டியிட்டார்.
1996ல் இருந்து 2014 வரை 6 முறை அதே தொகுதியில் வெற்றிபெற்றார். ஒருமுறை கூட தேர்தலில் தோல்வி அடையாத இவர் பாஜக தலைவர்கள் மட்டுமில்லாமல் மற்ற கட்சி தலைவர்களுடனும் நல்ல நட்பில் இருந்தவர்.
இவர் கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமிக்கு மிகவும் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
2003ல் கர்நாடக மாநில பாஜக தலைவராகவும் இருந்துள்ளார். அவர் தலைவராக இருந்த 2004 சமயத்தில்தான் கர்நாடகாவில் பாஜக மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
இரண்டு மாதம் முன் இவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இவர் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனளிக்காமல் நள்ளிரவில் இயற்கை எய்தினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications