பெங்களூர் ரூமில் தெரிந்த காட்சி.. அசைவற்ற உருவம் அருகில் 17 வயது வர்ஷினி.. நம்ப முடியாத ட்விஸ்ட்
பெங்களூர்: பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள இம்மடிஹள்ளி பகுதியில் மகளைக் கொலை செய்துவிட்டுத் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபரீத முடிவுக்கு மகளின் உடல்நலக் குறைபாடு காரணமா அல்லது வேறு ஏதேனும் குடும்ப பின்னணி உள்ளதா என்பது குறித்து ஒயிட்பீல்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். எந்தவிதமான தற்கொலை கடிதமும் சிக்காத நிலையில், இந்த இரட்டை மரணங்கள் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுவர்ணா (40), தனது மகள் காருண்யாவுடன் (17) பெங்களூருவில் வசித்து வந்தார். சுவர்ணா அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்து வந்தார். காருண்யா அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று சுவர்ணா வேலைக்குச் செல்லவில்லை. நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஒயிட்பீல்டு போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சுவர்ணா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார். அதே அறையில் மகள் காருண்யாவும் படுக்கையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், சுவர்ணா தனது மகள் காருண்யாவுக்கு முதலில் தூக்க மாத்திரைகளைக் கொடுத்துவிட்டு, அவர் மயங்கிய நிலையில் இருந்தபோது துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
மகள் இறந்ததை உறுதி செய்த பிறகு, சுவர்ணா அதே அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தச் சம்பவத்தில் தற்கொலை கடிதம் எதுவும் சிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சுவர்ணாவின் கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அவர் தனது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். மகளுக்கு நீண்ட நாட்களாக இருந்த சில உடல்நலக் குறைபாடுகள் மற்றும் அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக சுவர்ணா இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கடிதம் எதுவும் இல்லாததால், உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி இந்த முடிவிற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய போலீசார் முயன்று வருகின்றனர்.
காருண்யா யாரையாவது காதலித்தாரா? அதனால் பிரச்சனை ஏற்பட்டதா? அல்லது வேறு பிரச்சனையால் இந்த கொலை, தற்கொலை நடந்ததா? என்று தெரியவில்லை.. 2 சடலங்களையும் கைப்பற்றி போஸ்ட் மார்ட்டடம் செய்ய அனுப்பி வைத்து விசாரணையை துவங்கி உள்ளனர்.. பிளஸ்-2 மாணவி தாயாலேயே கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications