கைகோர்த்த காங்கிரஸ் - ஆம் ஆத்மி.. பெங்களூருக்கு விரையும் அரவிந்த் கெஜ்ரிவால்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: டெல்லியில் அதிகாரிகளை நியமிக்கும் உரிமை மாநில அரசுக்குதான் என நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், இதை நீர்த்துபோக செய்யும் விதமாக மத்திய பாஜக அரசு அவசர சட்டத்தை கொண்டுவந்தது. இந்நிலையில், இது குறித்து நாடாளுமன்றத்தில் மசோதாவையும் தாக்கல் செய்ய இருக்கிறது. இந்த மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கும் என அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளிடையேயான ஒற்றுமையை அதிகரித்திருக்கிறது.

ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அரசுக்கும் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், இது குடிமைப்பணி அதிகாரிகளை நியமிப்பதிலும் தொடர்ந்தது. டெல்லி அரசு அதிகாரிகளை நியமிப்பதில் அதிகாரம் அற்றதாக இருந்ததால் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் ஆளுநர்தான் அதிகாரிகள் நியமனத்தில் முக்கிய பங்காற்றி வந்தார். இதனால் டெல்லி அரசுடன் கருத்து வேறுபாடு கொண்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

The unity of the opposition parties has strengthened as the Congress has opposed the Delhi Emergency Act

எனவே இந்த அதிகாரிகளுக்கும் மக்களின் பிரதிநிதிகளாக உள்ள அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் போன்றவர்களுக்கும் இடையே தொடர் மோதல் போக்கு நீடித்தது வந்தது. இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நினைத்த டெல்லி அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு தொடர்பான மனுவில், "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும். ஆளுநர் இந்த அதிகாரத்தில் தலையிடக்கூடாது என்று உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தது.

இந்த மனு, தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி, ஹீமா கோலி, பி.எஸ்.நரசிம்மா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இந்த விசாரணையின் முடிவில் அதாவது கடந்த 11ம் தேதி நீதிபதிகள் ஒருமனதாக இந்த வழக்கில் உத்தரவு ஒன்றை பிறப்பித்தனர். இந்த உத்தரவின்படி, "மக்களின் விருப்பத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு வழங்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தனர்.

இது, அதிகாரிகளின் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மீண்டும் உறுதி செய்தது. இந்நிலையில் இதனை நீர்த்து போக செய்யும் விதமாக மத்திய அரசு அவசர சட்டத்தை கொண்டு வந்தது. தொடர்ந்து, இந்த சட்டத்தை உறுதியாக்க நாடாளுமன்றத்தில் இது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்ய இருக்கிறது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேறிவிடும், ஏனெனில் பாஜகவுக்கு அங்கு தனிப்பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் இதனை தோற்கடிக்கலாம்.

இதற்காக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான கெஜ்ரிவால் ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். காங்கிரஸ் இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார். இது குறித்து நேற்று முன்தினம் வரை மவுனம் காத்த காங்கிரஸ், நேற்று தனது மவுனத்தை கலைத்திருக்கிறது. அதாவது, பாஜகவின் இந்த அவசர சட்டத்தை எதிர்க்கிறோம் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறியுள்ளார்.

இது ஆம் ஆத்மிக்கு புதிய நம்பிக்கையும், எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இன்று பெங்களூரில் நடைபெறும் இரண்டாவது எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் ஆம் ஆத்மி பங்கு பெறுமா என்பது குறித்து சந்தேகம் இருந்து வந்த நிலையில், கூட்டத்தில் பங்கேற்பதை நேற்று ஆம் ஆத்மி உறுதி செய்துள்ளது. இக்கூட்டத்தில் மொத்தம் 24 கட்சிகள் பங்கேற்கின்றன.

இதில், சமாஜ்வாடி, சிவசேனா (UBT), திரிணாமுல் காங்கிரஸ், ஜனதா தளம் (யுனைடெட்), ஆர்ஜேடி, திமுக, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), பாரதிய ராஷ்டிரவாதி சமந்தா கட்சி, டிஆர்எஸ், சிபிஎம், சிபிஐ ஆகிய கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருக்கின்றன. இந்த கட்சிகளின் தலைவர்கள் இன்று பெங்களூர் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

அதேபோல, வைகோ தலைமையிலான ம.தி.மு.க., இ.ஆர்.ஈஸ்வரன் தலைமையிலான கொ.தே.ம.க., தொல். திருமாவளவன் தலைமையிலான வி.சி.க., இடதுசாரிக் கட்சிகளான ஆர்.எஸ்.பி, பார்வர்டு பிளாக், கேரளத்தில் முக்கிய கட்சியாக இருக்கும் ஐ.யூ.எம்.எல்., கேரள காங்கிரஸ் (ஜோசப்), கேரள காங்கிரஸ் (மணி) ஆகிய கட்சிகள் புதியதாக இந்த கூட்டத்தில் பங்கெடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+