வடிவேலு பட பாணியில்.. ஒரே நைட்டில் அக்கக்கா பிரிச்சி அள்ளிட்டு போயிட்டாங்களே! பெங்களூருவில் ட்விஸ்ட்
பெங்களூரு: பெங்களூரு நகரில் புதிதாக அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாப் இரவோடு இரவாக திருட்டு போனதாக செய்திகள் வெளியான விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. என்ன அது? விரிவாக பார்ப்போம்.
இந்த நிலையில் தற்போது திடீர் திருப்பமாக பெங்களூரு மாநகராட்சியின் உத்தரவை தொடர்ந்தே ஊழியர்கள் அந்த பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடையை அகற்றிச் சென்றது தெரியவந்து உள்ளது. தரக்குறைவான முறையில் பேருந்து நிறுத்த நிழற்குடை அமைக்கப்பட்டு இருப்பதாக புகார் வந்ததை தொடர்ந்து அதை மாநகராட்சி அகற்றியதாக கூறப்படுகிறது.
சில நேரங்களில் திரைப்படங்களில் வரும் சம்பவங்கள் உண்மையாக நடந்தால் எப்படி இருக்கும்.. அப்படி ஒரு சம்பவம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் நடந்துள்ளது. பேருந்து நிலையத்தையே இரவோடு இரவாக தூக்கி சென்றுள்ளார்கள் திருடர்கள். இந்த விஷயம் ஐந்து நாட்களாக வெளியே தெரியாமல் வைத்திருந்தார்கள். ஆனால் அதன்பிறகேவிஷயம் மெல்ல மெல்ல வெளியே தெரிந்திருக்கிறது.

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூரு மாநகரத்தை இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று என்று அழைப்பார்கள். ஐடி நிறுவனங்களின் தலைநகரம் என்று கூட சொல்லலாம். பல ஆயிரம் ஐடி நிறுவனங்கள் உள்ள நகரமாக பெங்களுரு வளர்ந்துள்ளது.
இங்கு அவ்வப்போது, விசித்திரமான திருட்டு சம்பவங்கள் நடப்பது உண்டு. அந்த வகையில் பெங்களூரு மாநகரின் கன்னிங்ஹாம் சாலையில் புதிதாக கட்டப்பட்ட பஸ் ஸ்டாப் ஒன்றை திடீரென்று காணவில்லை. அது எப்படிப்பா பஸ் ஸ்டாண்ட் காணாமல் போகும் என்று எதிர் கேள்வி எழுப்பினால், உண்மையாக திருடிக்கொண்டு போயிருக்கிறார்கள்.
கர்நாடகா மாநில சட்டசபையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது கன்னிம்ஹாம் சாலை பஸ் ஸ்டாப். இங்கு பயணிகளின் வசதிக்காக பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பழுதாகி போனாதால் பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் மேற்பார்வையின் கீழ் புதிய பேருந்து நிறுத்த கட்டுமானப் பணிகள் நடந்தது.
இதன்படி பேருந்து நிறுத்தத்தில் இருந்த ஸ்டீல் தூண்கள், மேற்கூரை, நாற்காலிகள், கம்பம் போன்றவை அமைத்து பேருந்து நிறுத்தம் இருந்தது. இந்நிலையில் பேருந்து நிறுத்தம் அமைத்த ஒரே வாரத்தில் இரவோடு இரவாக ஸ்டீல் தூண்கள், மேற்கூரை, நாற்காலிகள், கம்பம் என எல்லாவற்றையும் பெயர்த்து எடுத்து திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவற்றின் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும் என்று கூறப்படுகிறது.
விடிந்ததும் பேருந்து நிறுத்தம் மாயமானதை கண்ட பயணிகள் புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெங்களூரு மாநகர போக்குவரத்துக் கழகத்தின் துணைத் தலைவர் என்.ரவி ரெட்டி காவல் துறையில் கடந்த செப்டம்பர் 30 தேதி புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அருகாமையில் உள்ள பகுதிகளில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விஷயம் முதலில் வெளியே தெரியவில்லை.. நீண்ட நாட்கள் கழித்தே வெளியே தெரிந்துள்ளது. குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
கன்னிங்ஹாம் சாலை பஸ் ஸ்டாப் காணாமல் போனது தான் பெங்களூருவில் நடந்த முதல் பஸ் ஸ்டாப் திருட்டு என்று நினைத்துவிடாதீர்கள். இதற்கு முன்னதாக மார்ச் மாதத்தில் HRBR லேஅவுட்டில் 30 வருடங்களாக இருந்த பழமையான பேருந்து நிலையம் ஒரே இரவில் காணாமல் போனது. திருடர்கள்திருடிச் சென்றுவிட்டனர். முன்பு பீகாரில் ரயில் தண்டவாளங்களையே திருடி சென்ற சம்பவங்கள் நடந்திருந்தது.இதேபோல் வினோதமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்தும் வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications