பெங்களூரில் மோனிகா போட்ட ஆட்டம்.. 160 கிராம் நகையுடன் போலீஸ்காரருடன் ஒரே ஓட்டம்.. திகைத்த "கணவர்கள்"
பெங்களூர்: பெங்களூர் மோனிகா செய்த காரியத்தால், கர்நாடக மாநிலமே ஆடிப்போய் கிடக்கிறது.. கணவன், குழந்தைகளை மறந்த இந்த பெண்ணின் நடவடிக்கையால், அவரது குடும்பத்தினர் இன்று பாதிக்கப்பட்டுள்ளனர்.. இது தொடர்பான புகாரின்பேரில் போலீசாரும் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. எனினும் சந்திரா ஏற்படுத்திய அதிர்ச்சி இன்னமும் அவரது குடும்பத்தினரிடம் இருந்து நீங்கவில்லை.. யார் இந்த பெண் மோனிகா? சுருக்கமாக பார்ப்போம்.
பெங்களூர் சந்திரா லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர்தான் மோனிகா.. 35 வயதாகிறது.. இவருக்கு திருமணமாகி கணவரும், 2 மகன்களும் உள்ளனர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக மோனிகா தன்னுடைய முதல் கணவரை பிரிந்தார்.

இதனால் 2வது திருமணம் செய்து கொண்டார்.. 2-வது கணவர், தனது 2 மகன்களுடன் மோனிகா வசித்து வந்துள்ளார்..
மோனிகா போட்ட ஆட்டம்
இந்த நிலையில் மோனிகா இன்ஸ்டாவில் அதிக கவனத்தை செலுத்தினார்.. ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து வெளியிட்டு வந்தார்... பெங்களூரு HSR -அவுட் போலீசில் பணியாற்றிய ராகவேந்திரா என்பவர் மோனிகாவின் ரீல்ஸ் வீடியோவை பார்த்து கிறங்கிவிட்டார்.. ஆரம்பத்தில் வெறுமனே மோனிகாவின் ஃபாலோயராகத்தான் இருந்தார்..
ஒருகட்டத்தில் மோனிகாவுடன் பேச வேண்டும் என்ற ஆசை ராகவேந்திராவுக்கு வந்துவிட்டது.. அதனால் "பாலோ ரிக்வஸ்ட்" அனுப்பி வைத்தார்.. மோனிகாவும், ராகவேந்திராவின் பாலோ ரிக்வஸ்டை ஏற்றுக்கொண்டார்.. பிறகு ராகவேந்தர் மோனிகாவின் செல்போன் நம்பரை கேட்டார்.. மோனிகாவும் தன்னுடைய நம்பரை தந்தார்..
போலீஸ்காரர் ராகவேந்தர்
பிறகு மோனிகாவை நேரில் பார்க்க ஆசைப்பட்டார் ராகவேந்தர்.. அதன்படியே இருவரும் நேரில் சந்தித்து பேசினார்கள்.. இந்த பழக்கம் நெருக்கமானது.. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக நேரம் கழித்து வந்தனர்.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிகா தன்னுடைய வீட்டிற்கே ராகவேந்திராவை வரவழைத்து ஆட்டம் போட ஆரம்பித்தார்..
பிறகு 2 பேரும் சேர்ந்து ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தனர்.. இவர்களின் ஜோடியாக வெளியிட்ட ரீல்ஸ்கள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. இத்தனைக்கும் ராகவேந்திராவும் திருமணமானவர்.. அவருக்கும் ஒரு மகன் இருக்கிறார்.. ஆனாலும் இருவருமே தங்களது குடும்பங்கள், குழந்தைகளை மறந்து ரகசிய உறவை நீட்டித்து வந்தனர்..
160 கிராம் தங்க நகை
ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தார்கள்.. ஒவ்வொருவரும் தங்களது வீட்டை விட்டு ஓடிப்போக தீர்மானித்தனர்.
அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மோனிகா தன்னுடைய வீட்டில் இருந்த 160 கிராம் நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ராகவேந்திராவுடன் கிளம்பிவிட்டார்.. இப்போது 2 பேருமே எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
ஒரே ஓட்டம்
இது தொடர்பாக மோனிகாவின் இரண்டாவது கணவர், சந்திரா லே-அவுட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஆரம்பித்தனர்.
இதனிடையே, ராகவேந்திரா குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதன்பேரில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் ராகவேந்திராவை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரபரப்பை தந்து வருகிறது..
ராகவேந்திரா, மோனிகா இருவரின் சுயநலத்தினால், 2 குடும்பங்களுமே இன்று நிர்க்கதியாய் நிற்கின்றன.. மோனிகாவின் பிள்ளைகளும், ராகவேந்திராவின் பிள்ளைகளும் அவமானத்தால் கூனிக் குறுகி போயிருக்கிறார்கள்..!!
-
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம்












Click it and Unblock the Notifications