Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல்லாவற்றுக்கும் லிமிட் இருக்கு..தக் லைஃப் விவகாரத்தில் கன்னட அமைப்பினரை கண்டித்த டிகே சிவக்குமார்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று உச்சநீதிமன்றம் போட்ட போடால், ‛‛கமல்ஹாசன் விவகாரத்தில் நாம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். யாரும் சட்டத்த கையில் எடுக்க கூடாது. எல்லோருக்கும் லிமிட் என்பது உண்டு. போராளிகள் உள்பட அனைத்து அமைப்பினரும் அந்த லிமிட்டுக்குள் இருக்க வேண்டும்'' என்று வார்னிங் செய்தார்.

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். நடிகர் சிம்பு, திரிஷா உள்பட பலர் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் தக் லைஃப். இந்த திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் சொன்ன கருத்து தான்.

thug-life-movie-row-dk-shivakumar-urges-kannada-groups-to-respect-the-judiciary-and-says-that-know

அதாவது த படத்தின் இசை வெளியீட்டு சென்னையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமார் பங்கேற்றார். அப்போது ‛‛தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்'' என்று கமல்ஹாசன் பேசினார். இதற்கு கன்னட அமைப்பினர், கர்நாடகா திரைப்பட வர்த்தக சங்கத்தை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் தான் கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகும். இல்லாவிட்டால் ரிலீஸ் ஆகாது என்று அறிவித்தனர். கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டார். இதனால் கர்நாடகாவில் இந்த திரைப்படம் இன்னும் ரிலீசாகவில்லை. இதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் படத்தை கர்நாடகாவில் அனுமதிக்க வேண்டும் என்று கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் கர்நாடகா உயர்நீதிமன்றதை நாடியது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி கமல்ஹாசன் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறினார்.

இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. திரைப்படமும் கர்நாடகாவில் இன்னும் ரிலீசாகவில்லை. கர்நாடக உயர்நீதிமன்ற வழக்கில் படத்திற்கு அனுமதி கிடைக்காததால் கமல்ஹாசன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது "கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது திரைப்படம் வெளியாக அனுமதிப்பது சட்டப்படியானது. திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும்.

குண்டர்கள், கும்பல்கள் நமது வீதிகளை கைப்பற்ற அனுமதிக்க முடியாது. உரிய சான்றிதழ் பெற்ற பின் ஒரு திரைப்படத்தை வெளியிட எல்லாருக்கும் உரிமை உண்டு. அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு அது வேண்டுமா, வேண்டாமா என மக்கள் முடிவு செய்யட்டும். திரைப்படத்தை வெளியிடுவதை தடை செய்ய முடியாது'' என்று கருத்து தெரிவித்தது. அதுமட்டுமின்றி ‛‛கமல்ஹாசனை மன்னிப்பு கேட்க கூறுவது உங்கள் வேலையில்லை’’ என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டது.

உச்சநீதிமன்றம் இப்படி தெரிவித்த நிலையில் நேற்று கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார், கன்னட அமைப்பினர் மற்றும் கன்னட போராளிகளுக்கு முக்கிய கோரிக்கை வைத்தார். கண்டிப்புடன் அது இருந்தத. இதுபற்றி டிகே சிவக்குமார், ‛‛உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நாம் அனைவரும் மதிக்க வேண்டும். தக் லைஃப் திரைப்பட விவகாரத்தில் அமைதியாக இருக்க வேண்டும்.

கமல்ஹாசன் விவகாரத்தில் நாம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். அதனை மதித்து நடத்த வேண்டும். எல்லோருக்கும் லிமிட் என்பது உண்டு. போராளிகள் உள்பட அனைத்து அமைப்பினரும் அந்த லிமிட்டுக்குள் தான் இருக்க வேண்டும்.

யாரும் சட்டத்தை கையில் எடுக்க கூடாது. கர்நாடகா அமைதியான மாநிலம் என்று பெயர் பெற்றுள்ளது. பெங்களூர் ஒரு சர்வதேச நகரம். அனைவருக்கும் இந்த நகரம் தேவையாக உள்ளது. கன்னடர்கள் எப்போதும் பெரிய மனம் கொண்டவர்கள். கன்னட மொழி மீது சுயமரியாதை கொண்டவர்கள். இதனால் கன்னட மொழியை அவதூறு வகையில் யாரும் பேசக்கூடாது. நாங்கள் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீதித்துறைக்கு மதிப்பளிக்கிறோம்’’ என்று கூறியுள்ளார். இதன்மூலம் கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவக்குமார் தக் லைஃப் விவகாரத்தில் கன்னட அமைப்பினரை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+