சொன்ன நேரத்துக்கு வெளியாகாத அண்ணாமலை பட டீசர்... ஏமாற்றமடைந்த பாஜகவினர் - என்ன காரணம் தெரியுமா?
பெங்களூரு: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள கன்னட திரைப்படமான "அரபி" யின் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
2 கைகளும் இல்லாமல் நீச்சலில் சர்வதேச அளவில் சாதனைகளை படைத்த விஸ்வாசின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து கன்னடத்தில் திரைப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது.
அரபி என்ற பெயரில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் விஸ்வாசேவுக்கு பயிற்சியாளராக நடிக்க தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை இயக்குநர் அணுகியுள்ளார்.

அண்ணாமலையின் முதல் படம்
திரைப்படத்தின் கதையை கேட்டவுடன் அண்ணாமலைக்கு அது பிடித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்த அண்ணாமலை ரூ.1 மட்டுமே ஊதியமாக பெற்றுக்கொண்டு நடித்து இருக்கிறார். அரபி திரைப்படத்தில் அண்ணாமலை வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அண்ணாமலையின் இந்த முதல் படத்தின் டீசர் இன்று மாலை 4 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இதனால் பாஜகவினர் ஆர்வமுடன் டீசருக்காக காத்திருந்தனர். இந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.

கரூர் டூ கர்நாடகா
கர்நாடகா மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணிபுரிந்தவர் அண்ணாமலை. கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே சொக்கம்பட்டி என்ற கிராமத்தில் பிறந்தவர் அண்ணாமலை. கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பை நிறைவு செய்து பொறியாளராக மாறிய அண்ணாமலை, லக்னோ ஐ.ஐ.எம். இல் பட்டம் படித்துவிட்டு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்று காவல்துறைக்குள் நுழைந்தார்.

காவல்துறை
கடந்த 2013 ஆம் ஆண்டு கர்நாடகாவில் உடுப்பி மாவட்டத்தில் உள்ள கார்கலா துணை பிரிவு உதவி காவல் கண்காணிப்பாளராக போலீஸ் பணியை தொடங்கிய அண்ணாமலை, 2015 ஆம் ஆண்டில் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார். 2018 ஆம் ஆண்டில் பெங்களூரு துணை ஆணையராக பதவி உயர்வு பெற்ற அண்ணாமலை அதிரடியான நடவடிக்கைகளால் கர்நாடகாவில் புகழ்பெற்றார்.

விவசாயம்
இதனிடையே 2019 ஆம் ஆண்டு காவல்துறை பணியை ராஜினாமா செய்த அண்ணாமலை சொந்த கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்யப்போவதாக அறிவித்தார். தொடர்ந்து இயற்கை விவசாயம் தொடர்பாக பேசியும், எழுதியும் வந்த அவர், ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளால் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரஜினி தொடங்கப்போகும் கட்சி அல்லது பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகின.

அரசியல் பிரவேசம்
தொடக்கத்தில் அதற்கு அண்ணாமலை மறுப்பு தெரிவித்தாலும், பின்னர் அவரது கருத்துக்களின் மூலம் அவர் ஆர்.எஸ்.எஸ். கொள்கையின் அபிமானி என்பது உறுதியானது. இதன் பின்னர் 2020 ஆம் ஆண்டு முரளிதர் ராவ், சி.டி.ரவி, எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் அண்ணாமலை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை 24,816 வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தார்.
Recommended Video

தமிழ்நாடு பாஜக தலைவர்
இதன் பின்னர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 2021 ஜூலை மாதம் தமிழ்நாடு பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டார் அண்ணாமலை. தொடர்ந்து அரசின் நடவடிக்கைகளை விமர்சித்தும், மத்திய அரசின் செயல்பாடுகளை பிரபலப்படுத்தியும் பேசி வரும் அண்ணாமலை, தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்களின் மூலமாக தமிழ்நாடு மக்களின் பரிட்சையமான முகமாகவே மாறிவிட்டார்.
-
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
வானதி சீனிவாசனுக்கு திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனைக்கு ஓடிவந்த அண்ணாமலை..கோவை வடக்கில் ட்விஸ்ட் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
ஹெலிகாப்டரில் பறந்த அண்ணாமலை.. தரையிறங்கியதும் சுத்துப்போட்ட அதிகாரிகள்! என்ன நடந்தது? பரபரப்பு -
திருப்பூரில் 'அந்த' 1 சம்பவம்.. ஹாயாக உட்கார்ந்து, கேஷூவலா வேட்பாளர்கள் செய்த காரியம்.. தமிழகம் ஷாக் -
போய் டவுசரை போட்டு வேலையை பார்க்க சொல்லுங்க.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
கந்தசாமியா.. பழனிசாமியா.. கன்ஃபியூஷ் ஆன அண்ணாமலை.. ஷாக்கான அதிமுக வேட்பாளர் -
Jana Nayagan: ஜனநாயகன் படம் செல்போனில் இருந்தா உடனே அழிங்க.. கிரிமினல் நடவடிக்கை பாயும்.. கேவிஎன் நிறுவனம் வார்னிங் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை












Click it and Unblock the Notifications