பெங்களூருவில் கட்டி அணைத்து வரவேற்ற டி.கே. சிவக்குமார்..அன்னப்பறவை ஓவியத்தை பரிசளித்த மு.க.ஸ்டாலின்
பெங்களூர்: கர்நாடக மாநில முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுள்ளனர். பதவியேற்பு விழாவில் பங்கேற்க பெங்களூரு சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை மேடையில் கட்டி அணைத்து வரவேற்றார் டி.கே. சிவக்குமார். விருந்தினராக சென்றிருந்தாலும் பதவியேற்றவர்களுக்கு அன்னப்பறவை ஓவியத்தை பரிசளித்து பாராட்டினார்.
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் 135 இடங்களில் வெற்றிபெற்று காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையா பதவியேற்றுள்ளார். துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றுக்கொண்டார். இவர்களுடன் முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர், முன்னாள் மத்திய அமைச்சர் கேஎச் முனியப்பா, முன்னாள் அமைச்சர்களான எம்பி பட்டீல், கேஜே ஜார்ஜ், சதீஷ் ஜார்கிகோளி, பிரியங்க் கார்கே, ராமலிங்க ரெட்டி, ஜமீர் அகமது கான் உள்ளிட்டர்கள் அமைச்சர்களாக பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கூட்டணி கட்சியைச் சேர்ந்த பல மாநில தலைவர்கள் பெங்களூரு சென்றிருந்தனர். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மேடையேறிய போது அங்கிருந்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கட்டியணைத்து வரவேற்றார். பதவியேற்றுக்கொண்ட பிறகு முதல்வர், துணை முதல்வர் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு சிறப்பான பரிசளித்தார். பொன்னாடை போர்த்திய கையோடு அன்னப்பறவை ஓவியத்தை பரிசளித்தார்.
அன்னப்பறவை பற்றி தமிழக இலக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. அன்னப்பறவை நீரில் வாழ்ந்தாலும் அதன் இறகில் ஒருதுளி நீர் கூட ஒட்டாது. பாலும் நீரும் கலந்திருந்தாலும், அன்னம் தனியாகப் பாலினை பிரித்து அருந்தும். நீரின் அழுக்குகளில் வாழ்ந்தாலும், தான் உண்பவற்றை, அருந்துபவற்றை சுத்தமாக்கி உண்ணும் பண்புடையது என அன்னப்பறவை பற்றி பல சிறப்புகள் கூறப்பட்டுள்ளன.
அன்னப்பட்சி என்பது உண்மையில் உள்ளதா அல்லது கற்பனைத் தோற்றமா என்று கூற சிலரும் கேட்கலாம். நளன் தமயந்தி கதையில் இருவரின் காதலுக்கு அன்னப்பறவைதான் தூது போனதாக எழுதப்பட்டுள்ளது.
இராமாயணம், மகாபாரதம், இதிகாச காவியங்களில் அன்னப்பறவை பற்றி கூறப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் இதை ஹம்சம் அல்லது ஹம்சபட்சி என்று அழைக்கின்றனர். கோவில்களில் இறைவனும் இறைவியும் ஹம்ச வாகனத்தில் ஊர்வலம் வருவார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த பறவையின் ஓவியத்தை இன்றைய தினம் கர்நாடகாவில் முதல்வர், துணைமுதல்வருக்கு பரிசாக கொடுத்துள்ளார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications