கர்நாடகாவில் 3வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்.. தினமும் 4 ஆயிரம் கோடி இழப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் டீசல் விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும், அத்திப்பள்ளியில் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடி, மாநில சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டம் செய்து வருகிறார்கள். நேற்று அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இன்று 3 வது நாளாக லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் நேற்று முன் தினம் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். இதனால் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் லாரிகளும் ஓடவில்லை. டீசல் விலை உயர்வு, அத்திப்பள்ளியில் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடி, மாநில சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இது தொடர்பாக மாநில முதல்வர் சித்தராமையா மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கா ரெட்டி உள்ளிட்டோர் இது தொடர்பாக லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது டீசல் விலை உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றும், அத்திப்பள்ளியில் உள்ள போக்குவரத்துத் துறை சோதனைச்சாவடி, மாநில சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் நேற்றும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 நாட்கள் வேலைநிறுத்தம் காரணமாக சுமார் 6 லட்சம் லாரிகள் ஓடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு ரூபாய் 4 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications