பேக்கே பேக்கு.. சீரே பேக்கு! கொண்டை முடியை இழுத்து கும்மாங்குத்து.. உருண்ட பெண்கள்.. ஏன் தெரியுமா?
பெங்களூர்: கர்நாடகாவில் ஒரே ஒரு சேலைக்காக இரு பெண்கள் தலைமுடியை இழுத்து சண்டையிடும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இந்த சண்டை ஒரு புறம் நடந்தாலும் மற்ற பெண்கள் சேலைகள் வாங்குவதிலேயே குறியாக இருந்ததை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர்.
கர்நாடக மாநில தலைநகர் பெங்களுரின் மல்லேஷ்வரம் பகுதியில் மைசூர் சில்க்ஸ் என்ற கடை உள்ளது. மிகவும் பிரபலமான அந்தக் கடையில் வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது சிறப்பு ஆஃபர்களும் அறிவிக்கப்படும். அப்போது இந்தக் கடையில் பெண் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதும்.
கர்நாடகாவில் தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் களம் அனல் பறந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது மைசூர் சில்க்ஸ் கடையில் சிறப்பு ஆஃபர்கள் வெளியிடப்பட்டன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இந்த அறிவிப்பை கடை நிர்வாகம் வெளியிட்டது. குறைந்த விலையில் புடவைகள் விற்கப்பட்டதால் பெண்கள் கடைகளை நோக்கி திரண்டனர்.

இதனால் கடை முழுவதும் பெண் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதியது. கடையில் மலை போல குவித்து வைத்திருந்த சேலைகளை பெண்கள் பார்த்து பார்த்து எடுத்துக் கொண்டு இருந்தனர். கட்டுக்கடங்காமல் கூட்டம் இருந்தது. வித விதமான வண்ணங்களில் பெண்களை கவரும் வகையில் அவர்களுக்கு பிடித்த டிசைன்களில் சேலைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன.
அப்போது புடவை எடுப்பதில் இரு பெண்கள் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. ஒரே சேலையை இரு பெண்களும் எடுக்க முற்பட்டதாக தெரிகிறது. இந்த வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியது. அவ்வளவு கூட்டத்திற்கு மத்தியிலும் இரு பெண்களும் தலை முடியை பிடித்து கடுமையாக மோதிக்கொண்டனர். அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியரும் இவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் இந்த சண்டை முடிவுக்கு வந்த பாடில்லை.
இந்த சண்டையை அங்கிருந்த வாடிக்கையாளர் ஒருவர் தனது செல்போனில் எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பெண்கள் இருவரும் சத்தம் போட்ட படி ஒரு பக்கம் சண்டையிட்டு கொண்டு இருக்க...இன்னொரு பக்கத்தில் பெண்கள் மும்முரமாக குவித்து வைக்கப்பட்டு இருந்த சேலைகளை பார்த்து கொண்டு இருந்ததுதான் ஹைலைட்.. இன்னும் சிலரோ சண்டையை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் கூறுகையில், அங்கு என்ன நடக்கிறது என்று திரும்பி கூட பார்க்காமல் தாங்கள் வந்த வேலையை மட்டும் பார்த்து கொண்டு இருப்பது எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் மற்றொரு நெட்டிசன் கூறும் போது, சேலை என்பது ஒரு துணி மட்டும் கிடையாது. அது எமோஷன்.. என்று கேலியாக பதிவிட்டுள்ளார். அதேபோல், இது ஒரு விளம்பரம் போல தெரிகிறது என்று கூறியிருக்கிறார். இன்னொரு நெட்டிசன் கூறும் போது நமது நாட்டில் தான் மக்கள் நிலம், பணம், சேலைக்காக சண்டையிட்டு கொள்வார்கள் என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications