அழகான பெங்களூர் பெண்.. ஆசையோடு வீடியோ காலில் போனவருக்கு.. வாழ்நாளில் மறக்க முடியாத பரிசு
பெங்களூர்: பெங்களூரில் டேட்டிங் மூலம் அழகான பெண்ணிடம் ஆசைப்பட்டு பேசிய இளைஞர் வெறும் 2மணி நேரத்ல் ரூ.44000 ரூபாயை பறிகொடுத்துள்ளார். டெலிகிராம் ஐடியை வாங்கி பணம் பறித்த பெண், மார்பிங் வீடியோவை வெளியிடப்போவதாக கூறி பணத்தை பறித்திருக்கிறார்.
பெங்களூர் அருகே 23 வயது வாலிபர் ரஜத் சர்மாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) டேட்டிங் செயலியில் சந்தித்த பெண், அவரது டெலிகிராம் ஐடியைப் பெற்று பணம் பறித்ததுடன், அவரது மார்பிங் செய்யப்பட்ட அந்தரங்க வீடியோவை வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இந்த மோசடியால் நொந்து போன சர்மா சம்பவம் நடந்த ஒரு மாதத்திற்குப் பிறகு சைபர் கிரைம் ஹெல்ப்லைனுக்கு அழைத்த அவர், இறுதியாக பையப்பனஹள்ளி போலீசில் புகார் செய்தார்.

டேட்டிங்க் ஆப்பில் பெண்களிடம் பேசவும், ஜொல்லுவிடவும் ஆசைப்படுவோரை குறி வைத்து மோசடி நடைபெறுவது அதிகரித்துள்ளது. தனிமையில் உள்ள ஆண்கள், கல்யாணம் ஆகாத ஆண்கள் சபலத்தில் சிக்கி பணத்தை இழக்கிறார்கள். அப்படித்தான் சர்மா வெறும் 2 மணி நேரத்தில் ரூ.44000 ரூபாயை பறிகொடுத்துள்ளார்
அது தொடர்பாக வெளியான தகவல்களின் படி, டிசம்பர் 18 அன்று டேட்டிங் ஆப்பில் இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். இனிக்க இனிக்க சுமார் 2 மணி நேரம் பேசிய சர்மாவிடம், அந்த பெண் டெலிகிராம் கணக்கைப் பகிர்ந்து கொள்ளும்படி தூண்டிவிட்டு, வீடியோ காலில் வந்தார். அந்த பெண் திடீரென ஆடையில்லாமல் வந்து நின்றார். அதன்பின்னர் டெலிகிராம் ஐடி பாஸ்வேர்டை பேசி மயக்கி வாங்கிய அந்த பெண், அவனது கணக்கில் புகுந்தார். வீடியோவை சர்மாவின் நண்பர்களில் ஒருவருக்கு அந்த பெண் அனுப்பி உள்ளார். பின்னர் அந்த பெண், பணம் செலுத்தாவிட்டால் அதை சர்மாவின் மற்ற தொடர்புகளுக்கு அனுப்புவேன் என்று மிரட்டி உள்ளார்,
இதனால் பயந்த போன சர்மா பணத்தை அந்த பெண் சொன்ன கணக்கிற்கு மாற்றினார். ஆனால் அதேநேரம் தனக்கு உதவுமாறு சைபர் கிரைம் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்டார். ஆனால் பயம் மற்றும் அவமானத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க தயங்கி உள்ளார். போலீசார் கொடுத்த நம்பிக்கை காரணமாக பையப்பனஹள்ளி போலீசில் புகார் செய்தார்/ இதன் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்..
2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 84 பாலியல் பலாத்கார வழக்குகள் நகரத்தில் நடந்துள்ளதாக, பெங்களூரு காவல்துறை அக்டோபர் மாதம் வெளியிட்ட டேட்டாவில் கூறப்பட்டுள்ளது. சைபர் கிரைமின் மூத்த அதிகாரி இதுபற்றி கூறுகையில், இதுபோன்ற மோசடி வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
ஆனால் இதுபோன்ற வழக்குகளில் பணம் திரும்பப் பெறுவது அரிது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெற விரும்பினால், அவர்கள் புகாரைப் பதிவு செய்ய வேண்டும், அவர்கள் அதைச் செய்யத் தயங்குகிறார்கள். பெங்களூரு காவல்துறை இந்த பிரச்சனைகளை சிறப்பாக கையாளக்கூடியவர்கள், என்பதை உணர்ந்து மக்கள், எந்த தயக்கமும் இல்லாமல் எங்களை அணுகலாம் என்றார்.
இதனிடையே சர்மாவின் வழக்கை விசாரணை செய்யும் அதிகாரி கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் பயம் மற்றும் அவமானம் காரணமாக புகார் கொடுக்கத் தயங்குகிறார்கள், ஏதோ மோசடி செய்பவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால்
சர்மா போன்றவர்களின் வழக்குகளின் மூலமாக மறைந்திருந்திருந்து மக்களிடையே மோசடி செய்து பணம் பறிக்கும் சைபர் கிரைம் குற்றவாளிகளை பிடிக்க முடியும் என்றார்.
-
பெங்களூரில் நடைபெறும் 7-வது உலகத் திருக்குறள் மாநாடு.. தமிழ் அமைப்புகள் கலந்து கொள்ள அழைப்பு! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications